சிம்ரன் உருவாக்கிய நடிகை!
புதியவர் ஜெய்குமார் இயக்கி வரும் "உனக்காக என் காதல்' படத்தின் நாயகி ஷ்ரதா, சதா சிம்ரன் புராணம் பாடி வருகிறார். அவர்தான் உங்களுக்கு ரோல்மாடலா? என்று கேட்டால்... ""அதற்கும் மேல்... என் பூர்வீகம் கேரளம்


புதியவர் ஜெய்குமார் இயக்கி வரும் "உனக்காக என் காதல்' படத்தின் நாயகி ஷ்ரதா, சதா சிம்ரன் புராணம் பாடி வருகிறார். அவர்தான் உங்களுக்கு ரோல்மாடலா? என்று கேட்டால்...
""அதற்கும் மேல்... என் பூர்வீகம் கேரளம் என்றாலும் நான் வளர்ந்ததெல்லாம் மும்பையில்தான். மும்பையில் என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில்தான் சிம்ரன் வீடு இருக்கிறது. அதனால் அவர் குடும்பமே எனக்கு பழக்கம்.
சிம்ரன் எங்களுக்கு ஃபேமிலி பிரண்ட். எனக்கு அக்கா மாதிரி. நானும் நடிக்க முடியுமா? என அக்காவிடம் கேட்டபோது அவர்தான் எனக்கு ஆலோசனை வழங்கி வழிநடத்தினார். முதலில் படிப்பில் கவனம் செலுத்தக்கூறினார். அதன்படி படிப்பை முடித்தேன்.
அதன்பிறகு நடனம் கற்றுக்கொள்ளச் சொன்னார். அதையும் முறையாகக் கற்றுக்கொண்டேன். நடிக்கலாம் என முயற்சி செய்தபோதுதான்... ""நீ ஹோம்லியாக இருப்பதால் ஹிந்திப் படங்களில் நடிக்க முயற்சி செய்வதை விட்டுவிட்டு தமிழ்ப் படங்களில் நடிக்க முயற்சி செய்; அங்கு உனக்கு நல்ல எதிர்காலம் அமையும்'' என அறிவுறுத்தினார்.
அவருடைய அறிவுரையின்பேரில்தான் தமிழ்ப் படவுலகில் முயற்சி செய்தேன். வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிம்ரனை எனக்குப் பிடிக்கும் என்றாலும் அவர் போல க்ளாமராக நடிக்க மாட்டேன். ரேவதி போல ஹோம்லியாகத்தான் நடிப்பேன்'' என்கிறார் ஷ்ரதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...