கிழக்கு ஆப்ரிக்காவில் மம்பட்டியான்!
27 ஆண்டுகளுக்கு முன்பு தியாகராஜன் நடித்து வெற்றி பெற்ற "மலையூர் மம்பட்டியான்' படம், தற்போது அவருடைய மகன் பிரசாந்த் நடிப்பில் "மம்பட்டியான்' என்ற பெயரில் வெளியாகிறது. சரிதா நடித்த வேடத்தல் மீரா ஜாஸ்மி


27 ஆண்டுகளுக்கு முன்பு தியாகராஜன் நடித்து வெற்றி பெற்ற "மலையூர் மம்பட்டியான்' படம், தற்போது அவருடைய மகன் பிரசாந்த் நடிப்பில் "மம்பட்டியான்' என்ற பெயரில் வெளியாகிறது. சரிதா நடித்த வேடத்தல் மீரா ஜாஸ்மினும் சில்க் ஸ்மிதா நடித்த வேடத்தில் பாலிவுட்டின் கவர்ச்சிப் புயல் மல்லிகா ஷெராவத்தும் நடிக்கிறார்கள். படத்தின் சிறப்பம்சம் குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜனிடம் கேட்டபோது...
""ஒரு நடிகர் நடித்த கதையில் அவருடைய மகன் நடிப்பது தமிழ் சினிமாவில் இதுதான் முதல்முறை. இந்தப் படத்தில் காமெடியும் சண்டைக் காட்சிகளும் பெரிய அளவில் பேசப்படும். பிரசாந்த்-வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள காமெடி "வின்னர்' படத்தைவிட பல மடங்கு சிறப்பாக அமைந்துள்ளது.
தமிழகம், கேரளம், மைசூர் ஆகிய இடங்களில் உள்ள அடர்ந்த காடுகளோடு நியூசிலாந்து, தாய்லாந்து, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பயங்கர காடுகளிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். காட்டெருமை மற்றும் யானைகளோடு பிரசாந்த் செய்யும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களை அசர வைக்கும். பெரும்பாலான காட்சிகளை ஹெலிகாப்டரில்தான் படமாக்கியுள்ளோம்.
இறுதிக் கட்டப் பணிகள் முடிந்துவிட்டன. ஜூன் மாதம் படம் திரைக்கு வரும்'' என்று கூறும் தியாகராஜன் இந்தப் படத்தின் ஆர்ட் டைரக்டராகவும் பணியாற்றியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...