ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வீக்கம் போக்க..!
காலை யில் படுக் கையை விட்டு எழும் போது என் மூகம் வீங்கி இருக்கிறது. கண்க ளுக்கு அடி யில் நீர் கோர்த்து பை போலத் தொங்குகிறது. அதுபோலவே நீண்ட தூர பஸ் பிரயாணங்க ளில் கால் வீங்கி செருப் பைப


காலை யில் படுக் கையை விட்டு எழும் போது என் மூகம் வீங்கி இருக்கிறது. கண்க ளுக்கு அடி யில் நீர் கோர்த்து பை போலத் தொங்குகிறது. அதுபோலவே நீண்ட தூர பஸ் பிரயாணங்க ளில் கால் வீங்கி செருப் பைப் போடமுடிய வில்லை. இது எத னால் ஏற்படுகிறது? வீக்கம் வடிய வழி என்ன?
முத்துராமன், சங்கராபுரம்.
மூளை, இதயம், சிறுநீரகங்கள் ஆகியவற் றின் சீரான செயல்பாடுக ளின் மூலம் மனித உட லில் தேவையற்ற நீரின் வெளி யேற்றம் சிறப் பாக நடைபெறுகிறது. இரத்தத் தில் உள்ள அணுக்கள் அதற்கு உதவி செய் கின்றன. உட லில் வீக்கம் உள்ளவர்கள் தவிர்க்க வேண் டிய உணவு வகைக ளில் முக்கிய மாக, சிற் றூர்க ளில் வாழும் கோழி முதலியவற்றினுடைய வும், நீரி லும் சதுப்பு நிலத்தி லும் வாழும் உயிரினங்களினுடைய வும் இறைச்சி வகைகள், உலர்ந்து சாறு நீங் கிய காய்கறி கீரை முதலியவை, புதிய அரி சிச் சோறு, வெல்லத்துடன் கூடிய சிற் றுண்டிகள், மாவினா லான உணவு வகை, தயிர்ச் சோறு, எள் ளுப் பொடி சாதம், உப் புச் சுவை யுள்ள நீர், புளித்த கள், பொரி, உலர்ந்த இறைச்சி, எளி தில் செரிக் காத உணவு வகைகள், தன் உட லுக் குப் பழக்க மில்லாதவை, எரிச்சலை யுண் டாக் கும் உண வுப்பொ ருட்கள், பக லில் தூக் கம், கலவி ஆகியவற் றைக் குறிப்பிட லாம்.
வீக்கம் பளுவாக வும், கெட்டியாக வும், வெண்மை நிறம் கொண்டதாக வும் தோன்றுதல், நாக் கில் சுவை யின்மை, வாயிலி ருந்து உமிழ் நீர் ஒழு கிக் கொண்டி ருத்தல், தூக்கம் அதிக மாக வருதல், வாந்தியாகுதல், பசி மந்த மாக இருத்தல், வீக்கம் நெடுங்காலம் தணியாமல் துன்பம் தருதல், வீங் கிய இடத் தில் விர லால் அழுத் தி னால் வரும் பள்ளம் அப்ப டியே இருத்தல், இரவு நேரங்க ளில் பஸ் பயணத் தின் போது வீக்கம் அதிகமாகுதல் போன்ற அறிகுறிகள் காணப்பட் டால் உங்க ளுக்கு ஏற்பட் டுள்ள வீக்கமானது கபதோஷத் தின் சீற்றத்தி னால் ஏற்பட்டது என அறிய லாம். நீங்கள் குறிப்பி டும் அறிகுறிக ளும் கபத் தின் ஆதிக்கத்தி னால் தான் என ஊகிக்க முடிகிறது.
உங்க ளுக்கு கழுத் தின் வழி யாக முகம் மற் றும் தலைப் பகு திக் குச் செல் லும் ரத்தக் குழாய்க ளில் அடைப்பு ஏற்பட் டுள்ளதாகத் தெரிகிறது. குழாய்க ளின் வழி அடைப் புக் குக் காரண மாக கபத் தின் குணங்களா கிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், பிசுபி சுப்பு ஆகியவற் றின் வளர்ச்சியி னைக் குறிப்பிட லாம். இவற் றிற்கு நேர் எதிரா கிய குணங்க ளைக் கொண்ட உண வும் மருந் தும் உங்க ளுக்கு நிறை வான பல னைத் தரக்கூ டும்.
அந்த வகை யில்-காலை உண வாக திப்பி லித் தூளு டன் கலந்த கொள் ளுக் கஞ் சித் தெளி வையோ அல்லது திரிகடுகம் எனப்ப டும் சுக்கு மிள குத் திப்பி லிச் சூரணத் தைப் பயத்தங் கஞ் சித் தெளிவுடன் சாப்பிடுவது மிக வும் நல் லது. மதிய மற் றும் இரவு உண வாக பழைய சம்பா அரி சிச் சோறு டன் நன்கு கடைந்து வெண் ணெய் நீக் கிய மோருடன், நன் றாக வேக வைத்த கறி காய்களுடன் சாப் பிட நல்லது.
காலை உணவு செரித்த பிற கும், மதிய உண விற்கு ஒரு மணி நேரம் முன் பாக வும், இஞ்சி யும் வெல்ல மும் சம அளவாகச் சேர்த்து அரைப்பலம் (25 கிராம்) இடித்து முதல் நாள் உட் கொள்ள வும். இரண்டாவது நாள் முதல், இரண் டும் சேர்த்து நாளுக்கு அரைப்பலம் வீதம் அளவை அதிக மாக் கிப் பயன்ப டுத்த வும். ஐந்து பலம் அளவா கும் வரை பத்து நாட்க ளும் அதற்கு மேல் நாள்தோ றும் ஐந்து பலம் வீதம் ஒரு மாதம் பயன்ப டுத்த வும்.
இந்த அளவை ஒரே வேளை யில் உண்பது கடினம் என்ப தால் ஒரே நாளில் உண்ட உணவு செரிமானமாகி யுள்ள நிலை யில் சிறிது சிறிதாகப் பிரித் தும் உண்ண லாம். இப்ப டிச் செய்து சாப்பிடுவதற்கு நேர மில் லையே என்று நீங்கள் கருதி னால் தசமூலஹரீதகீ என்று ஒரு லேகியம் விற்கப்படுகிறது. சுமார் 10-15 கிராம் வீதம் காலை மாலை வெறும் வயிற் றில் உள்ள போது நக் கிச் சாப்பிட வும்.
பிரயாணத் தில் ஏற்ப டும் கால் வீக்கம் நீங்க கொள்ளு, சுக்கு இவ்விரண்டை யும் வகைக்கு 15 கிராம் வீதம் எடுத்து 2 லிட்டர் தண்ணீ ரில் சேர்த்து 1 லிட்டர் ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி, இந்த மூலி கைத் தண் ணீரை ஒரு நாளில் சிறிதுசிறிதாகக் குடிக்கப் பயன்ப டுத்த வும், பஸ் பயணத் தின் போதும், தண் ணீர் தாகம் உள்ள நிலை யில் இந்தத் தண்ணீ ரைச் சிறிது சிறிதாகப் பருக, கால் வீக்கம் ஏற்படாமல் உட லைப் பாது காக் க லாம். அகில் கட் டையை சந்தனம் போல் அரைத்து வீக்கத் தின் மீது பூசிக் கொள்வ தும் நல்லது.
விற்கப்ப டும் ஆயுர் வேத மருந்துக ளில் வர ணாதி கஷாயம் 15 மி.லி. எடுத்து 60 மி.லி. தண் ணீர் (கொதித்து ஆறியது) கலந்து கால் ஸ்பூன் 2.5 மி.லி. தேனும் கலந்து காலை மாலை உண விற் கு 1 மணி நேரம் முன் பாக, சுமார் 21 நாட்கள் சாப்பிட வும்.
(தொட ரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...