""உண்மை பேசு, கோபப்படாதே, லாகிரி மதுபானங்களைத் தவிர்த்துவிடு, பிறருக்குத் தீங்கு நினையாதே, சொல்லாதே, செய்யாதே, உடலை அளவுக்கு மீறி வருத்தாதே, அமைதி கொள், பிரியமாகப் பேசு, இறைவனை அமைதியுடன் வழிபடு, உடல் தூய்மை, உள்ளத் தூய்மை இரண்டும் மேலானது. அவற்றைக் கடைப்பிடி, புத்தியை நல்வழியில் தூண்டிச் செயலாற்று, இருப்பதைப் பகிர்ந்து கொள், கொடுப்பதை மனமுவந்து கொடு, வாழ்வு நன்கு அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் நிலைத்திரு, பொல்லாங்குக்கு ஆட்படாதே, உயிருள்ளவற்றுடன் பரிவுடன் பழகு, தூக்கத்தையும் விழிப்பையும் சீராக அமைத்துக் கொள், உணவில் நெய், பால் அதிகம் சேர்த்துக் கொள், தேசத்தையும், காலத்தையும் ஒட்டி நடந்து கொள், பகுத்தறிவைப் பயன்படுத்து, அகந்தை கொள்ளாதே, நல்லோர்கள் செல்லும் பாதையில் செல், கலப்பட உணவை ஏற்காதே, உன் உள்ளே உள்ள ஆத்மாவின் வசப்படு. நெறிமுறை தவறாதே. இவை தினமும் கையாளத்தக்க சிறந்த முறைகள்'' என்று சரகர் எனும் முனிவர் கூறுகிறார்.