ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பக்கவாதம் தீர..!
கடந்த வருடம் எனக்கு வலது கால் வலது கை பாதிக்கப்பட்டுப் பேச்சுத் திறனும் போய்விட்டது. இப்போது மற்றவருடைய கையைப் பிடித்து நடக்கிறேன். தனியாகச் செல்ல முடியாது. பேச்சு அம்மா என்ற ஒரு வார்த்தை மட்டும் வருக


கடந்த வருடம் எனக்கு வலது கால் வலது கை பாதிக்கப்பட்டுப் பேச்சுத் திறனும் போய்விட்டது. இப்போது மற்றவருடைய கையைப் பிடித்து நடக்கிறேன். தனியாகச் செல்ல முடியாது. பேச்சு அம்மா என்ற ஒரு வார்த்தை மட்டும் வருகிறது. நான் மீண்டும் பேசுவதற்கும் நடப்பதற்கும் வழி என்ன?
நம் உடம்பில் மொத்தம் 107 மர்ம ஸ்தானங்கள் இருக்கின்றன. அவற்றிலும் மூளை, இதயம், சிறுநீர்ப்பை ஆகிய மூன்று இடங்கள் மிக முக்கியமானவை. இவற்றில் எளிதில் நோய் ஏற்படுவதில்லை. ஏற்பட்டுவிட்டாலோ, அதைச் சரிசெய்வது என்பது பிரம்மபிரயத்தனமாகும். மூளைப் பகுதியை காப்பதற்காக மண்டை ஓடு தடிமனாக அதைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பானது மூளையைச் சார்ந்தது.
மூளை உபாதைகளை குணப்படுத்தும் சிகிச்சைமுறைகளில் நஸ்யம் எனப்படும் மூக்கினுள்ளே விடப்படும் மூலிகை மருந்துகளால் நிறைவான பலனை விரைவில் அடைய முடியும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. இந்த நஸ்ய முறையானது விரேசனம் (மூளையிலுள்ள தோஷங்களை உருக்கி வெளியேற்றுவது), பிரம்ஹனம் (மூளைப் பகுதியிலுள்ள நரம்புகளை புஷ்டிப்படுத்துவது)- சமனம் (வாத பித்த கப தோஷங்களின் சீற்றத்தை மூளையில் அமைதிப்படுத்தி அங்குள்ள நோயைக் குணப்படுத்துவது) என்று மூன்று வகையில் உள்ளது.
தலைவலி, தொடு உணர்ச்சியின்மை, கண்ணில் ஏற்படும் ஸ்ரீர்ய்த்ன்ய்ஸ்ரீற்ண்ஸ்ண்ற்ண்ள் உபாதை, தொண்டை உபாதைகள், முகம் வீங்குதல், தைராய்டு உபாதை, கழுத்துக்கு கீழ் ஏற்படும் கிருமி தொற்று நோய்கள், பால் உன்னிகள், தோல்நோய், காக்கா வலிப்பு, மூக்கிலிருந்து நீர் வடிதல் ஆகியவற்றைக் குணப்படுத்த விரேசன நஸ்யம் பயன்படும்.
வாத தோஷத்தின் சீற்றத்தினால் தலையில் வறட்சி ஏற்பட்டுக் கடும் தலைவலி உண்டாகுதல், வெயில் ஏற ஏற ஏற்படும் தலைவலி, குரல் வளையில் ஏற்படும் பாதிப்பினால் குரல் கம்மி என்ன பேசுகிறோம் என்பதைப் பிறர் புரிந்து கொள்ள முடியாத நிலை, மூக்கு மற்றும் வாயின் உட்பகுதியில் வறட்சி, வாக்சங்கம் எனப்படும் பேசும்திறன் குறைந்துவிடுதல் (இந்த உபாதையை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்), ல்ற்ர்ள்ண்ள் எனப்படும் கண் இமைகளைத் திறக்க முடியாமல் கஷ்டப்படும் நிலை, கைகளைத் தூக்க முடியாத அளவிற்குத் தோள்பட்டை மற்றும் கைகளில் ஏற்படும் கடுமையான வலி ஆகியவற்றில் பிரம்ஹனநஸ்யம் செய்து கொள்வதற்கு மிகவும் சிறந்தது.
உடல் மற்றும் முகத்தில் ஏற்படும் கரும்படைகள், முடி உதிருதல், கண்ணில் ஏற்படும் சிவப்பு வரிகள் ஆகியவற்றில் சமனநஸ்யத்தின் உபயோகம் மிகவும் நல்லது.
உங்களைப் பொருத்தவரை முன் குறிப்பிட்ட விரேசன - பிரம்ஹனநஸ்யங்கள் மிகவும் அவசியமானவை. ஆனால் அவற்றை நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு செய்து கொள்வதைவிட, ஆயுர்வேத மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்வதே நல்லதாகும். காரணம் இவற்றின் தயாரிப்பு முறைகள் எளிதானவை அல்ல. உங்களுடைய உடல்நிலை, தலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள தோஷங்களின் தாக்கம், அவற்றின் மூலம் ஏற்பட்டுள்ள நோயின்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மூலிகைத் தைலம் அல்லது கடுகெண்ணெய், நல்லெண்ணெய், துளசி இலை, வில்வ இலை போன்றவற்றை அரைத்து எண்ணெய்யில் கரைத்தல், மூலிகைக் கஷாயங்களைச் சேர்த்தல், தேன், உப்பு, ஆஸவங்கள் அவற்றுடன் சேர்த்தல், முயல், ஆடு போன்றவற்றின் மாமிச சூப்பின் சேர்க்கை, அவற்றின் தூய ரத்தத்தைச் சேர்த்தல், மரங்களிலுள்ள பிசின் சேர்த்தல், பால் மற்றும் தண்ணீர் கலத்தல் ஆகியவை இந்த மூன்று நஸ்ய முறைகளில் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதால், இவற்றை உங்களால் வீட்டில் செய்து கொள்வது எளிதான காரியமல்ல.
வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெறும்வகையில் ஏதேனும் எளியமுறைகள் உண்டா? என்று நீங்கள் எண்ணும் பட்சத்தில் ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய அணு தைலத்தை சுமார் 2 - 4 சொட்டுகள் மூக்கினுள்ளே காலை இரவு பல் துலக்கிய பிறகு முதல் 21 நாட்கள் விட்டுக் கொள்ளவும். அதன் பிறகு க்ஷீரபலா 101 எனும் நெய் மருந்தை நீராவியில் உருக்கி, அணு தைலத்திற்குக் குறிப்பிட்டுள்ள வேளைகளில் மூக்கினுள்ளே விடவும். தலைக்கு க்ஷீரபலா தைலத்தை பஞ்சில் முக்கி, உச்சந்தலையில் வெதுவெதுப்பாக ஊறவிட்டு, சுமார் 1 மணி நேரம் கழித்து கொதித்து ஆறிய தண்ணீரில் தலைக்குக் குளிக்கவும். இதைக் காலையில் ஊற வைத்துக் குளிப்பது நல்லது.
உள் மருந்துகளை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடவும். அந்த ஆலோசனையைக் கூறலாமே என்று நீங்கள் நினைத்தால், சாரஸ்வத சூரணம் 2.5 கிராம் எடுத்து மஹா கல்யாணம் கிருதம் எனும் நெய் 5 மி.லி. அதனுடன் குழைத்து 4 சொட்டுத் தேனும் கலந்து, காலை இரவு உணவிற்கு ஒவ்வொரு சாத உருளைக்கும் நடுவே, சிறிது சிறிதாக சுமார் 5 - 6 மாதங்களுக்கு நக்கிச் சாப்பிட, மூளை உபாதை குறைய நிறைய வாய்ப்பிருக்கிறது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...