இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
"காலமெல்லாம் காதல் வாழ்க', "உன்னுடன்' படங்களை இயக்கிய ஆர்.பாலு கடந்த பத்தாண்டுகளாக படம் எதுவும் இயக்காமல் இருந்தார். "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?' என்று அவர் நண்பர்கள் கேட்டால் ""இதுதான் என் அடுத்தப்


"காலமெல்லாம் காதல் வாழ்க', "உன்னுடன்' படங்களை இயக்கிய ஆர்.பாலு கடந்த பத்தாண்டுகளாக படம் எதுவும் இயக்காமல் இருந்தார். "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?' என்று அவர் நண்பர்கள் கேட்டால் ""இதுதான் என் அடுத்தப் படத்தின் தலைப்பு. அந்தப் படத்தின் வேலையாகத்தான் இருந்தேன்'' என்கிறார்.
இதில் சின்னத் திரை தொகுப்பாளர் ஆனந்தகண்ணன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கிறார். படத்தின் கதை பற்றி கேட்டபோது...
""காஞ்சிபுரத்தில் வாழும் நெசவாளர்களின் வாழ்வியல் சார்ந்த பிரச்னைகளை ஒரு காதல் கதையின் பின்னணியில் சொல்லியிருக்கிறோம். பொருளாதாரத்தில் எவ்வளவுதான் பின்தங்கியிருந்தாலும் நெசவாளர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் குடும்ப கெüரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
அப்படிப்பட்ட ஒரு குடும்பத்து பெண்ணின் காதலால் அந்தக் குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை யதார்த்தமாகக் கூறியிருக்கிறோம். விவேக்கின் சமூக சிந்தனைகளை உள்ளடக்கிய நகைச்சுவைக் காட்சிகளும் படத்துக்குப் பெரிய பலமாக அமையும்'' என்றார் ஆர்.பாலு. இந்தப் படத்தைத் தயாரிக்கும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஐஸ்ஹவுஸ் தியாகு, இதில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
புதிய ராவணன்!
ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், விக்ரம், ப்ரியாமணி உள்ளிட்டோர் நடிக்க தமிழிலும் ஹிந்தியிலும் உருவாகி வரும் "ராவணன்' படத்தின் படப்பிடிப்பு, மணிரத்னத்துக்கு கடந்த மாதம் ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் புதுப் பொலிவோடு படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் மணிரத்னம். ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் ஹிந்திப் பதிப்பில் விக்ரம் ராவணனாக நடிக்கிறார்.
அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை இலங்கையில் உள்ள லங்காபுரா தீவில் படமாக்கத் திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். ஆனால் தற்போது இலங்கையில் உள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அங்கு படப்பிடிப்பு நடத்த கடும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் அங்குதான் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள மணிரத்னம் இலங்கை அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார்.
வித்தியாசமான விருப்பம்!
திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினாலும் சங்கீதாவிடம் "நான் அவனில்லை' 2-ம் பாகத்தைத் தவிர வேறு பட வாய்ப்புகள் இல்லை. வாய்ப்புகள் வரவில்லையா எனக் கேட்டபோது...
""திருமணத்துக்குப் பிறகு ஒவ்வொருவருக்கும் குறிப்பாக நடிகைகளுக்கு இமேஜ் மாறும். ஆனால் எனக்கு திருமணத்துக்கு முன்பு எப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைத்ததோ அதே போல்தான் இப்போதும் வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் சில அதிக க்ளாமரான கேரக்டர்கள். அதோடு ஒரு பாடலுக்கு நடனமாடவும் பல வாய்ப்புகள் வருகின்றன.
ஆனால் திருமணத்துக்குப் பிறகு இதுபோன்ற கேரக்டர்களில் நடிக்க விருப்பமில்லை. "நான் அவனில்லை-2' படத்தில் வித்தியாசமான வேடம் என்பதால் அதில் மட்டும் நடிக்கிறேன். கமல், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களுக்கு வித்தியாசமான வேடங்கள் கிடைப்பது போல் நடிகைகளில் எனக்குக் கிடைத்தால் சம்பளத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கால்ஷீட் கொடுக்க நான் தயார்'' என்றார் சங்கீதா.
எதிர்பாராதது!
ஜீவன் நடிக்கும் "கிருஷ்ணலீலை' படத்தை இயக்கி வரும் ùஸல்வன் "மாக்கான்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை அவருடைய உதவியாளர் என்.முரளிசாமி இயக்குகிறார். இதில் ùஸல்வனுடன் நடிக்க பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பலரும் மறுத்துவிட்டனராம்.
இதையடுத்தே கீர்த்திசாவ்லாவிடம் பேசியிருக்கிறார்கள். ஒரு பெரும் தொகையைச் சம்பளமாகக் கேட்டால் தன்னை விட்டுவிடுவார்கள் என நினைத்து அந்தத் தொகையைக் கூறியிருக்கிறார். பட நிறுவனத்தினரோ எதுவும் பேசாமல் அந்தத் தொகைக்குச் சம்மதம் சொல்லி கீர்த்திசாவ்லாவைக் கதாநாயகி ஆக்கிவிட்டனர்.
அதையும் தாண்டி...
பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் விக்ரம் பட், மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவாவின் மனைவி அனீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் "முத்திரை'. கிராமத்தில் சிறு சிறு திருட்டுகளைச் செய்து வரும் இருவர், ஒரு பெரிய சமுதாயப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதே கதை. யுவன்ஷங்கர்ராஜாவின் இசையில் படத்தின் பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. ஜீவாவின் படங்களில் அவ்வப்போது தலைகாட்டி வரும் ஸ்ரீநாத் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தையடுத்து விக்ரம் பட் மேலும் மூன்று புதிய தமிழ்ப் படங்களைத் தயாரிக்கிறார். அவற்றுள் ஒன்றை அனீஸ் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு "அதையும் தாண்டி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. மற்ற இரண்டு படங்களில் ஒன்றை முன்னணி இயக்குநரும் இன்னொன்றை புதுமுகம் ஒருவரும் இயக்குகிறார்கள்.
டபுள் ஓ.கே.
"காதலில் விழுந்தேன்' படத்துக்குப் பிறகு நகுலன்-சுனேனா இணைந்து நடிக்கும் புதிய படம் "மாசிலாமணி'. கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்தப் படத்தை கே.எஸ்.ரவிகுமார், மலையாள இயக்குநர் ஐ.வி.சசி ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஆர்.என்.ஆர்.மனோகர் இயக்குகிறார். படத்தின் இறுதிக் கட்டப் பணியில் இருந்த இயக்குநரிடம் பேசியபோது...
""இது காதலும் ஆக்ஷனும் கலந்த கதை. அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஏழைக் கதாநாயகன் உயர்ந்த இடத்தில் உள்ள நாயகியைக் கைப்பிடிக்க மேற்கொள்ளும் முயற்சிகள்தான் கதை. இதை எந்தவொரு காதல் படத்தின் சாயலும் இல்லாமல் எடுத்திருக்கிறோம். "காதலில் விழுந்தேன்' படத்தைப் பார்த்த பிறகு இதே ஜோடியை வேறொரு பரிமாணத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவில்தான் அந்த ஜோடியை நடிக்க வைத்திருக்கிறேன். டி.இமான் இசையில் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகும். கல்பாத்தி அகோரம் தயாரித்த "திருட்டு பயலே', "சந்தோஷ் சுப்ரமணியம்' படங்கள் போல இந்தப் படமும் தர ரீதியாகவும் கமர்ஷியல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெறும்'' என்றார் ஆர்.என்.ஆர்.மனோகர்.
குறைப்பது சகஜமப்பா!
ஷக்திசிதம்பரம் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் "ராஜாதிராஜா' படத்தில் மீனாட்சி, மும்தாஜ், ஸ்னிக்தா, காம்னா என நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். ஆனால் படத்தில் திடீரென காம்னாவின் காட்சிகள் குறைக்கப்பட்டன. கால்ஷீட் கொடுத்ததை விட ஓரிரு நாள்கள் கூடுதலாக நடிக்க பெரும் தொகை கேட்டதால்தான் அவருடைய பகுதி குறைக்கப்பட்டது என கூறப்பட்டது. இதுகுறித்து கேட்டால்...
""ஒரு படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நடிகர்களோ நடிகைகளோ நடிக்கும்போது அவர்களுக்குரிய காட்சிகளை முதலிலேயே தீர்மானித்துவிடுவோம். அதன்படிதான் படப்பிடிப்பு நடக்கும்.
எடிட்டிங்கின்போது சிலருடைய காட்சிகளைக் குறைக்க வேண்டி வரும். இது எல்லா படங்களிலும் நடப்பதுதான். அதுதான் "ராஜாதிராஜா' படத்திலும் நடந்தது. காம்னா என்று இல்லை கதாநாயகன் சம்பந்தப்பட்ட சில காட்சிகளைக் கூட நீக்கியிருக்கிறோம். மற்றபடி காம்னாவின் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை'' என்கிறார் ஷக்திசிதம்பரம்.
ரொம்பப் புதுசு!
மணிரத்னத்தின் உதவியாளர் சுதா "துரோகி' என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஸ்ரீகாந்த், "வெண்ணிலா கபடிகுழு' விஷ்ணு ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். பூஜா, பூர்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இரண்டு ஹீரோ கதைகளில் நடிக்கத் தொடங்கி விட்டீர்களே என ஸ்ரீகாந்திடம் கேட்டால்...
""நல்ல கதை அமைந்தால் மூன்று அல்லது நான்கு ஹீரோ கதைகளில் கூட நடிப்பேன். பெண் இயக்குநர்களின் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் படத்தின் கதையை சுதா கூறியதும், உண்மையிலேயே "பெண்களால் இப்படிக்கூட சிந்திக்க முடியுமா?' என வியந்துவிட்டேன். வழக்கமான பாணியில் நண்பர்கள், நட்பு, இடையில் ஒரு காதல், அதன் பிறகு மோதல், அதனால் துரோகம் அதை வைத்துதான் "துரோகி' என்ற டைட்டில் என்றெல்லாம் யூகித்துவிடக்கூடாது. இதையெல்லாம் தாண்டி, கதை தமிழ் சினிமாவுக்கே புதிய விஷயமாக இருக்கும்'' என்றார்.
டபுள் ஓ.கே.
"காதலில் விழுந்தேன்' படத்துக்குப் பிறகு நகுலன்-சுனேனா இணைந்து நடிக்கும் புதிய படம் "மாசிலாமணி'. கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்தப் படத்தை கே.எஸ்.ரவிகுமார், மலையாள இயக்குநர் ஐ.வி.சசி ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஆர்.என்.ஆர்.மனோகர் இயக்குகிறார். படத்தின் இறுதிக் கட்டப் பணியில் இருந்த இயக்குநரிடம் பேசியபோது...
""இது காதலும் ஆக்ஷனும் கலந்த கதை. அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஏழைக் கதாநாயகன் உயர்ந்த இடத்தில் உள்ள நாயகியைக் கைப்பிடிக்க மேற்கொள்ளும் முயற்சிகள்தான் கதை. இதை எந்தவொரு காதல் படத்தின் சாயலும் இல்லாமல் எடுத்திருக்கிறோம்.
"காதலில் விழுந்தேன்' படத்தைப் பார்த்த பிறகு இதே ஜோடியை வேறொரு பரிமாணத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவில்தான் அந்த ஜோடியை நடிக்க வைத்திருக்கிறேன். டி.இமான் இசையில் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகும். கல்பாத்தி அகோரம் தயாரித்த "திருட்டு பயலே', "சந்தோஷ் சுப்ரமணியம்' படங்கள் போல இந்தப் படமும் தர ரீதியாகவும் கமர்ஷியல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெறும்'' என்றார் ஆர்.என்.ஆர்.மனோகர்.
குறைப்பது சகஜமப்பா!
ஷக்திசிதம்பரம் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் "ராஜாதிராஜா' படத்தில் மீனாட்சி, மும்தாஜ், ஸ்னிக்தா, காம்னா என நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள்.
ஆனால் படத்தில் திடீரென காம்னாவின் காட்சிகள் குறைக்கப்பட்டன. கால்ஷீட் கொடுத்ததை விட ஓரிரு நாள்கள் கூடுதலாக நடிக்க பெரும் தொகை கேட்டதால்தான் அவருடைய பகுதி குறைக்கப்பட்டது என கூறப்பட்டது. இதுகுறித்து கேட்டால்...
""ஒரு படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நடிகர்களோ, நடிகைகளோ நடிக்கும்போது அவர்களுக்குரிய காட்சிகளை முதலிலேயே தீர்மானித்துவிடுவோம். அதன்படிதான் படப்பிடிப்பு நடக்கும்.
எடிட்டிங்கின்போது சிலருடைய காட்சிகளைக் குறைக்க வேண்டி வரும். இது எல்லா படங்களிலும் நடப்பதுதான். அதுதான் "ராஜாதிராஜா' படத்திலும் நடந்தது. காம்னா என்று இல்லை கதாநாயகன் சம்பந்தப்பட்ட சில காட்சிகளைக் கூட நீக்கியிருக்கிறோம். மற்றபடி காம்னாவின் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை'' என்கிறார் ஷக்திசிதம்பரம்.
ரொம்பப் புதுசு!
மணிரத்னத்தின் உதவியாளர் சுதா "துரோகி' என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஸ்ரீகாந்த், "வெண்ணிலா கபடிகுழு' விஷ்ணு ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். பூஜா, பூர்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இரண்டு ஹீரோ கதைகளில் நடிக்கத் தொடங்கி விட்டீர்களே என ஸ்ரீகாந்திடம் கேட்டால்...
""நல்ல கதை அமைந்தால் மூன்று அல்லது நான்கு ஹீரோ கதைகளில் கூட நடிப்பேன். பெண் இயக்குநர்களின் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் படத்தின் கதையை சுதா கூறியதும், உண்மையிலேயே "பெண்களால் இப்படிக்கூட சிந்திக்க முடியுமா?' என வியந்துவிட்டேன்.
வழக்கமான பாணியில் நண்பர்கள், நட்பு, இடையில் ஒரு காதல், அதன் பிறகு மோதல், அதனால் துரோகம் அதை வைத்துதான் "துரோகி' என்ற டைட்டில் என்றெல்லாம் யூகித்துவிடக்கூடாது. இதையெல்லாம் தாண்டி, கதை தமிழ் சினிமாவுக்கே புதிய விஷயமாக இருக்கும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...