திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நடன நாயகர்!

  சுமார் 1000 படங்களுக்கு மேல் நடன இயக்குநராகப் பணியாற்றிய டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், முதல்முறையாக "பா.ரா.பழனிச்சாமி' என்ற படத்தில் கதையின் நாயகனாக புதிய அவதாரம் எடுக்கிறார். "மலையன்' பட இயக்குநர் கோபிய

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:33 pm

மனோஜ் கிருஷ்ணா

  சுமார் 1000 படங்களுக்கு மேல் நடன இயக்குநராகப் பணியாற்றிய டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், முதல்முறையாக "பா.ரா.பழனிச்சாமி' என்ற படத்தில் கதையின் நாயகனாக புதிய அவதாரம் எடுக்கிறார். "மலையன்' பட இயக்குநர் கோபியிடம் உதவியாளராகப் பணியாற்றிய எம்.ரஜாக் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தைப் பற்றி கேட்டபோது...

  ""ஊரே மெச்சும் அளவுக்கு சக மனிதர்களை நேசிக்கும் நல்ல மனிதர் ஒருவர், தன் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் காரணமாக நேர் மாறான மனிதராக மாறுகிறார். அவரது மாற்றத்துக்கான காரணமும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் சொல்வதுதான் கதை.

இந்த வேடத்துக்கு சுந்தரம் மாஸ்டர்தான் பொருத்தமாக இருப்பார் என முடிவு செய்தோம். கடும் சிரமத்துக்குப் பின்னரே அவரை நடிக்க வைக்க முடிந்தது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படம் வெளிவந்த பிறகு சுந்தரம் மாஸ்டர், தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் ஒருவராக அறியப்படுவார்'' என நம்பிக்கை தெரிவித்தார்.

புதிய ப்ளே பாய்!

ஆக்ஷன், காமெடிக்குப் பிறகு விஷால் ரொமான்டிக் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் "தீராத விளையாட்டு பிள்ளை'. திரு இயக்கும் இந்தப் படத்தில் இவருக்கு நான்கு நாயகிகள். படத்தைப் பற்றி கேட்டபோது...

  ""இதில் நான் ப்ளேபாய் கேரக்டரில் வித்தியாசமாக நடித்துள்ளேன். சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையாக படத்தை உருவாக்கியுள்ளோம்.

என் முந்தைய படங்கள் போதிய வரவேற்பைப் பெறாததால் இந்தப் படத்தைத் தயாரிக்க பலரும் தயங்கினர். அந்த நேரத்தில் கதையை நம்பி படத்தைத் தயாரிக்க தைரியமாக ஒப்புக்கொண்ட என் அண்ணன் விக்ரம்கிருஷ்ணாவுக்கு மிகவும் நன்றி கடன்பட்டிருக்கிறேன். படத்தில் இடம்பெற்ற 60 சதவீத சம்பவங்கள் என் வாழ்க்கையில் நிஜமாகவே நடந்தவை. யுவன்ஷங்கர்ராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன.

இந்தப் படம் என் சினிமா கேரியரில் பெரிய திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்றவரிடம், இமயமலை செல்வது குறித்து கேட்டால்... ""நான் நடித்த படம் தோற்றதால் இமயமலை செல்வதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. நான் அடிக்கடி இமயமலை சென்றிருக்கிறேன். அங்கு செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அது என் தனிப்பட்ட விஷயம்'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.