திரைக் கதிர்
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கொரில்லா'. ஹாலிவுட் உலகில் தனித்துவம்


ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கொரில்லா'. ஹாலிவுட் உலகில் தனித்துவம் வாய்ந்த பாணியாக விளங்கும் ஹெய்ஸ்ட் காமெடி த்ரில்லர் வகை படமாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சிம்பன்ஸியுடன் நடிகர் ஜீவா நடிக்கிறார். இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக பயிற்சி அளிக்கப்பட்ட சிம்பன்ஸியை வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் நடிக்கவுள்ள சிம்பன்ஸி தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற விலங்குகள் பயிற்சி மையமான "சாமுட்' பயிற்சி மையத்தால் பயிற்சி அளிக்கப்பட்டு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி மையத்தில் இருந்து பயிற்சி அளிக்கப்பட்ட சிம்பன்ஸிகள்தான் "ஹேங்ஹோவர்-2', "ப்ளேனட்ஸ் ஆஃப் தீ ஏப்ஸ்' ஆகிய ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி. இந்த படத்தில் சிம்பன்ஸி, ஆக்ஷன் மற்றும் காமெடி காட்சிகளில் இடம் பெறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக தாய்லாந்தில் பிரத்யேகமாக ஒரு சிம்பன்ஸி 4 மாதங்களாக தயார்படுத்தப்பட்டு வருகிறது. இறுதிக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

தற்போது அரசியலை விட்டு விலகியிருக்கும் நாஞ்சில் சம்பத் சினிமாவுக்கு வருகிறார். அரசியல் தொடர்புடைய "எல்கேஜி' எனும் படத்தில் நடிக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தை பிரபு இயக்குகிறார். இப்படத்தின் நாயகனாக ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். இதில் அவருக்குத் தந்தையாக நாஞ்சில் சம்பத் நடிக்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி எடிட் செய்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இந்தப் படத்தின் இசை உரிமையை, திங்க் மியூஸிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

மலையாளம், தெலுங்கில் சில படங்களில் நடித்த பிறகே நீண்ட நாள் கழித்து தமிழ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் சாய் பல்லவி. முன்னதாக மணிரத்னம் உள்ளிட்ட பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை சாய் பல்லவி ஏற்க மறுத்திருந்தார். இந்நிலையில் விஜய் இயக்கிய "கரு' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். டைட்டில் பிரச்னை காரணமாக இப்படம் பிறகு "தியா' என பெயர் மாற்றப்பட்டு திரைக்கு வந்தது. சாய்பல்லவி தமிழில் நடிக்கும் முதல்படம் என்ற எதிர்பார்ப்புடன் படம் வெளிவந்தபோதும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் அவரது நடிப்பு பாராட்டு பெற்றது. இதையடுத்து தற்போது இரண்டு படங்களில் சாய் பல்லவி நடிக்கிறார்.

தனுஷ் ஜோடியாக "மாரி 2' படத்தில் நடிப்பதுடன் செல்வராகவன் இயக்க சூர்யா நடிக்கும் "என்ஜிகே' படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மாரி முதல்பாகத்தில் ஏற்கெனவே தனுஷ் ஆட்டோ டிரைவராக நடித்திருந்தார். சாய் பல்லவியும் ஆட்டோ டிரைவர் வேடம் ஏற்கிறார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுவதற்காக சிறப்பு பயிற்சி எடுத்துவருகிறார் சாய் பல்லவி. ஏற்கெனவே தெலுங்கு படமொன்றில் நடித்த சாய் பல்லவி டிராக்டர் ஓட்டி நடித்தார். "மாரி 2' படத்தை பாலாஜிமோகன் இயக்குகிறார். யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு சினிமா உலகில் தனி இடம் பிடித்த டாப்ஸி அதன் பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஒரு சில இயக்குநர்கள் கதை சொல்ல காத்திருந்த போதும், பாலிவுட் படங்களுக்கே முக்கியத்துவம் தந்தார். அவர் நினைத்ததைப் போன்று ஹிந்தி திரையுலகம் அவருக்கு கைகொடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு அமிதாப் பச்சனுடன் இணைந்து "பிங்க்' படத்தில் நடித்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதில் இடம் பெற்ற நீதிமன்றக் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்தது. இதையடுத்து மீண்டும் அமிதாப் நடிக்கும் படத்தில் டாப்ஸி நடிக்கிறார். "பேட்லா' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுஜாய் கோஷ் இயக்குகிறார். க்ரைம் த்ரில்லராக உருவாகவுள்ள இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. சுஜாய் கோஷ் ஏற்கெனவே வித்யாபாலன் நடித்த "கஹானி' படத்தின் 2-ஆம் பாகத்தையும் இயக்கியதுடன் மேலும் பல படங்கள் இயக்கி உள்ளார்.
அமிதாப், டாப்ஸி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை ஸ்காட்லாந்து, லண்டன் போன்ற இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் சில ஹிந்தி படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார் டாப்ஸி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...