டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தினமும் ஐ லவ் யூ சொல்லுவேன்!

அர்த்தனா பினு... 2016-ஆம் ஆண்டு வெளிவந்த "சீதம்மா ஆண்டலு ராமய்யா சீற்றலு' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி, "தொண்டன்' படத்தில்

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:09 pm

ஜி. அசோக்

அர்த்தனா பினு... 2016-ஆம் ஆண்டு வெளிவந்த "சீதம்மா ஆண்டலு ராமய்யா சீற்றலு' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி, "தொண்டன்' படத்தில் சமுத்திரக்கனிக்கு தங்கையாக இறக்குமதி ஆனார். இப்போது "செம', "கடைக்குட்டி சிங்கம்', "வெண்ணிலா கபடி குழு 2' என தமிழில் பிஸி... பிறந்தது ... வளர்ந்தது... படித்தது கேரளத்தில். விரல்கள் கோர்த்து அடிக்கடி கன்னம் வருடிக் கொண்டு இதழ்களுக்கு முன் கண்கள் சிரிப்பது அர்த்தனா பினுவின் மோனலிசா மேனரிசம். 

* மலையாளப் பெண்ணாக இருந்துக் கொண்டு தமிழ் சினிமாவுக்கு முன்னுரிமை கொடுக்கிறீங்க...?
நான் நடிகை ஆவேன் என்று நினைத்தது இல்லை. சின்ன வயதில் இருந்தே சினிமா ரொம்பப் பிடிக்கும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கேரள தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளாராக  இயங்கி வந்தேன். அங்கே நிகழ்ச்சி தயாரிப்பு வரை எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். அப்போதுதான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. பொழுதுபோக்காக மாடலிங் செய்ய ஆரம்பித்தேன். நிறைய விளம்பர படங்களில் நடித்தேன். கேமரா பழகி விட்டது. டி.வி., ஃபேஸ்புக்கில் என்னை அடிக்கடி பார்த்த லைக்ஸ் எகிறி மலையாளத்தில் சுரேஷ் கோபி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதன் பின் தெலுங்கில் "சீதம்மா ஆண்டலு ராமய்யா சீற்றலு' பட வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தின் வெற்றி எனக்கு புது வெளிச்சம் தந்தது. அடுத்தடுத்து அங்கே பெரிய வாய்ப்பு வந்ததால் தெலுங்கில் பிஸி. தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது கனவு. சமுத்திரக்கனி சார் "தொண்டன்' படத்தில் வாய்ப்பு தந்தார். ஜி.வி.பிரகாஷூடன் "செம'. அடுத்து பாண்டிராஜ் சார் "கடைக்குட்டி சிங்கம்' படத்துக்காக அழைத்தார். சுசீந்திரன் சார் "வெண்ணிலா கபடிக் குழு 2' படத்தில் பெரும் வாய்ப்பு தந்துள்ளார். இன்னும் சில பட வாய்ப்புகளும் வந்திருக்கின்றன. அடுத்த சில வருடங்களுக்கு சென்னையில்தான் வாசம். சந்தோஷமாக இருக்கிறேன். 

* மாடலிங், ஆர்ட் ஃபிலிம், சினிமா என்று நிறைய பயணம் செய்து வந்திருப்பீர்கள்.... சக்சஸ் டிப்ஸ் என்ன...?
எப்போதும் எல்லோரிடமும் கனிவாக இருக்க வேண்டும். எல்லோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும். எவ்வளவு பெரிய ஸ்டாராக வலம் வந்தாலும், லைட் பாய் வரை ஆரம்பத்தில் இருந்தே அதே மனதோடு இருக்க வேண்டும். எதையும் சரியாக செய்ய வேண்டும். ஆனால், ரிசல்ட் பற்றி எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. தினமும் நிறைய ஏமாற்றங்கள் கிடைக்கலாம். "உன் முகம் சரியில்லை. உனக்கு நடிக்க வரலை, ஹீரோயினாக நீ ஜெயிப்பது கஷ்டம்' என்று முகத்துக்கு முன்பே நிறைய பேசினார்கள். அதில் உள்ள முக்கியமான விஷயங்களை எடுத்துக் கொண்டு மற்றவற்றை கண்டுக் கொள்ளக் கூடாது. வருடத்தில் ஒரு மாதம் பெய்கிற மழைதான், மீதி பதினோரு மாதத்துக்கும் தண்ணீர் கொடுக்கும். அப்படி அவ்வப்போது கிடைக்கும் பாராட்டுக்களை மட்டும் வைத்து, எதையும் தாண்டி வந்து விட வேண்டும். 

* அழகாகப் பேசுறீங்க.. அதுதான் உங்கள் ப்ளஸ்ஸா...?
யார் கூடவும் எளிதாக பழகி விடுவேன். அவர்கள் எப்படிப்பட்ட ஆளாக இருந்தாலும், நட்பாகி விடுவேன். என் கூட நடித்த, வேலை பார்த்த எல்லோருமே என் நண்பர்கள்தான். சமுத்திரக்கனி சார், ஜி.வி, பாண்டிராஜ், சுசீந்திரன் சார்  என நட்பு வட்டத்தில் பலர் இருக்கிறார்கள். கல்லூரி நாள்களில் மேடையேறி நடித்து கைத்தட்டல் வாங்குகிற மாதிரி இருக்கிறது அவர்களுடன் வேலைப் பார்ப்பது. எனக்கே தெரியாமல் என்னிடம் இருக்கிற பெஸ்ட்டை கொண்டு வந்து விடுகிறார்கள். 

* உங்களுக்கு யார் ரோல் மாடல்....?
நயன்தாராவை ரொம்ப பிடிக்கும். அவரது துணிச்சல் மிகவும் கவர்ந்தது. இப்படி எல்லோரையும் வகைப்படுத்தலாம். யாரையும் குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றுமில்லை. 

* உங்களைப் பற்றி ஒரு ரகசியம் சொல்லுங்கள்...?
தினமும் நான் ஒருவரிடம் ஐ லவ் யூ சொல்லுவேன். அந்த ஐ லவ் யூ சொல்லாமல் என் ஒரு நாள் விடியாது. முடியாது... அவரா.. இவரா... என கற்பனை செய்ய வேண்டாம். அவர் என் அம்மாதான். என் அம்மாவிடம்தான் தினமும் ஐ லவ் யூ சொல்வேன். வேறு எந்த ரகசியமும் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.