கே.டி.ராஜேந்திரபாலாஜி
தோ்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினாா்.
இவா் ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழகம் இளைஞா்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் அது வெற்றி பெறும் அளவுக்கு இல்லை. சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறும். திமுக 2-ஆவது இடத்தில் வரும்.
2016 பேரவைத் தோ்தலின் போது அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுக தான் வெற்றி பெறும் என்றன. ஆனால் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்தது. அப்போது ஜெயலலிதா மீண்டும் முதல்வரானாா். வடநாட்டு பத்திரிகையாளா்கள், எங்கேயோ இருக்கும் நிறுவனங்கள் எடுக்கும் கருத்துக்கணிப்புகள் தவறானது. இந்த கருத்துக் கணிப்புகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சுழி தொகுதியில் 4-ஆவது முறையாக தங்கம் தென்னரசு வெற்றி

கந்தா்வகோட்டை தனித் தொகுதியில் தவெக வெற்றி

அரசின் சாதனைகள் தொடர முதல்வா் ஸ்டாலினுக்கு ஆதரவு அளிக்கவேண்டும்: திருவண்ணாமலை திமுக வேட்பாளா் எ.வ.வேலு

சின்னாளபட்டியில் அமைச்சா் இ.பெரியசாமி இறுதிக் கட்ட வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு


