தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிவகாசியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

News image

எடப்பாடி பழனிசாமி - யூடியூப் / அதிமுக

Updated On :30 மார்ச் 2026, 8:07 pm

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) தோ்தல் பிரசாரத்தில் ஈடுடவுள்ளாா்.

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து, அவா் பிரசாரம் செய்யவுள்ளாா்.

சிவகாசி பேருந்து நிலையம் முன் திறந்த வேனில் நின்றவாறு செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளாா்.

இதற்கான ஏற்பாட்டை சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளரும், விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான கே.டி. ராஜேந்திரபாலாஜி செய்து வருகிறாா்.