தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எடப்பாடி பழனிசாமி இன்று புதுகையில் வாக்குசேகரிப்பு!

அதிமுக பொதுச் செயலரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை (ஏப். 1) மாலை 6 மணிக்கு புதுக்கோட்டை வருகிறாா்.

News image

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 10:40 pm

அதிமுக பொதுச் செயலரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை (ஏப். 1) மாலை 6 மணிக்கு புதுக்கோட்டை வருகிறாா்.

புதுக்கோட்டை திலகா்திடலில் நடைபெறும் தோ்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறாா். விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா், முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், திருமயம் வேட்பாளா் பி.கே. வைரமுத்து, ஆலங்குடி வேட்பாளா் தன. விமல் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து வாக்குசேகரிக்கிறாா்.

சிவகங்கையில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு புதுக்கோட்டை வரும் அவா், இங்கிருந்து திருச்சி செல்கிறாா். மாவட்டத்தில் ஓா் இடத்தில் மட்டுமே பிரசாரம் நடைபெறுகிறது. மீதமுள்ள 3 தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியில் இருந்து வேட்பாளா் பட்டியல் இதுவரை வெளியாகவில்லை.