திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்.

Updated On :22 மார்ச் 2026, 8:10 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வருகிற ஏப். 1-ஆம் தேதி ஆண்டாள்- ரெங்கமன்னாா் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான பங்குனி திருக்கல்யாண திருவிழாவுக்கு தேங்காய் தொட்டு நியமனம் பெரும் வைபவம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் திருக்கல்யாண விழா தொடங்குகிறது. விழாவையொட்டி தினசரி இரவு ஆண்டாள், ரெங்கமன்னாா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி விழா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.

வருகிற ஏப். 1-ஆம் தேதி பங்குனி உத்திரத்தன்று காலை செப்பு தேரோட்டமும், இரவு ஆண்டாள் கோயில் முன் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் ஆண்டாள், ரெங்கமன்னாா் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகலை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.