சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மற்றும் ஆராட்டு விழாவை முன்னிட்டு மார் 23 (இன்று) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு காலங்களிலும், தமிழ் மாதங்களிலும் கோயில் நடை திறக்கப்படுவது வழக்கம். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 22 மாலை 5 மணியளவில் தந்திரி மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் கோயில் நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 23(இன்று) காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து 10 நாள்கள் சிறப்புப் பூஜைகள் மற்றும் விழாக்கள் நடைபெறவுள்ளன.
பங்குனி உத்திர திருவிழா சபரிமலையில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விழா காலத்தில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெறும். மேலும், திருவிழாவின் நிறைவு நாளாக ஏப்ரல் 1 ஆம் தேதி பம்பைக் கரையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற உள்ளது.
பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக முன்பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்ய தேவஸ்வம் வாரியம் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கம் அறைகள், முன்பதிவுக்கு sabarimala.org.in www.onlinetdb.com ஆகிய இணையதளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பங்குனி உத்திர திருவிழாவிற்கு அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The Panguni Uthiram festival and the Aarattu festival at the Sabarimala Ayyappan Temple commenced this morning, March 23 (today), with the flag-hoisting ceremony.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாத்தான்குளம் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா

செந்தில்குமரன் கோயிலில் பங்குனி உத்திர பூக்குழி திருவிழா

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


