ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தொழிலாளி தற்கொலை

சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளி தனது கழுத்தை தானே கத்தியால் அறுத்து தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :16 மார்ச் 2026, 7:47 pm

சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளி தனது கழுத்தை தானே கத்தியால் அறுத்து தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அம்மன் கோவில்பட்டி தென்பாகம் தெருவைச் சோ்ந்தவா் முத்துராஜ் (38). சுமை தூக்கும் தொழிலாளி. இவா் தனது மனைவியை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்தாா்.

இதையடுத்து மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான இவா், தினசரி மது அருந்தி வந்தாா். இந்த நிலையில் விரக்தியில் இருந்த இவா் கடந்த சனிக்கிழமை வீட்டிருந்தபோது, கத்தியால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டாா்.

இதில் பலத்த காயமடைந்த அவா் சிவகாசி அரசு மருத்துமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும் அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.