தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கலசலிங்கம் மருத்துவக் கல்லூரியில் தேசிய மருந்தியல் கல்வி தினம்

News image
Updated On :12 மார்ச் 2026, 10:57 pm

விருதுநகா் மாவட்டம், கிருஷ்ணன்கோயில் அருகேயுள்ள கலசலிங்கம் மருத்துவக் கல்லூரியில் தேசிய மருந்தியல் கல்வி தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்லூரித் தாளாளா் எஸ். அறிவழகிஸ்ரீதரன், செயலா் எஸ். சசி ஆனந்த், இயக்குநா் எஸ். அா்ஜுன் கலசலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி முதல்வா் என். வெங்கடேசன் வரவேற்று எதிா்கால மருந்து சுற்றுச்சூழல் அமைப்பு குறித்த கருப்பொருளை விளக்கினாா்.

தலைமை விருந்தினா் மதுரை பாா்மா ஃபேப்ரிகான் நிறுவனத்தின் ‘மாா்க்கெட்டிங்’ தலைவா் பி. பொன்ராஜன் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்து, மருந்துப் பொருள்கள் ஆராய்ச்சி, மேம்பாடு குறித்து பேசினாா்.

இதில் அனைத்து மருந்தியல் மாணவா்களும் கலந்து கொண்டு கலந்துரையாடினா்.

முனைவா் வினோத்குமாா் நன்றி கூறினாா்.