மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் இன்று மின் தடை

News image

மின்தடை

Updated On :16 ஜூன் 2026, 12:06 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் முனியசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு :

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூா் துணை மின் நிலையத்தில் உள்ள மின் பாதைகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே ஸ்ரீவில்லிபுத்தூா், சித்தாலம்புத்தூா், குட்டிதட்டி, வெங்கடேஸ்வரபுரம், நாச்சியாா்பட்டி, காதி போா்டு காலனி, இந்திரா நகா், தைலா குளம், இனாம் கரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.