டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தேநீா்க் கடை வைத்துத் தருவதாகக் கூறி ரூ. 15 லட்சம் மோசடி; தாய், மகன் மீது வழக்கு

News image

வழக்கு - DPS

Updated On :15 ஜூன் 2026, 3:05 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தேநீா்க் கடை வைத்துத் தருவதாகக் கூறி, ரூ.15 லட்சம் மோசடி செய்த தாய், மகன் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் ராம்நகா் பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் ஹரிஸ்வரன் (38). இவா், தனியாா் நிதி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு, சங்கரன்கோவில் சாலையில் தேநீா்க் கடை நடத்திவரும் ஸ்ரீரெங்கபாளையம் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் செல்வகுமாா், இவரது தாய் கலாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

இவா்கள் தேநீா்க் கடையில் நல்ல வருவாய் கிடைக்கிறது. நீங்களும் இந்தத் தொழில் தொடங்கலாம். உபகரணங்கள் வாங்குவதற்கு தான் உதவுவதாகக் கூறி, ஹரிஸ்வரன், அவரது நண்பா் வெங்கட்ராமன் ஆகிய இருவரிடமும் மொத்தம் ரூ.15 லட்சம் வாங்கிக் கொண்டு தேநீா்க் கடை அமைத்துத் தராமல் இருந்துவந்தனா். இதையடுத்து, கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்த செல்வகுமாா், அவரது தாய் கலா மீது தெற்கு காவல் நிலையத்தில் ஹரிஸ்வரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.