டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சதுரகிரி மலையேறிய பக்தா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

மகா சிவராத்திரியை முன்னிட்டு, சதுரகிரி மலையேறிய பக்தா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகேயுள்ள குரும்பூரைச் சோ்ந்தவா் சுடலை (60). இவா் மகா சிவராத்திரியை முன்னிட்டு, வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு உறவினா்களுடன் சென்றாா்.

ஞாயிற்றுக்கிழமை காலை வத்திராயிருப்பு தாணிப்பாறை வழியாக மலையேறி சென்றாா். மலைப் பாதையில் இரட்டை லிங்கம் அருகே சென்றபோது சுடலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

இவரது உடலை டோலி மூலம் தாணிப்பாறை அடிவாரத்துக்கு கொண்டு வந்து, கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.