ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பைக் மீது லாரி மோதியதில் பூ வியாபாரி உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :9 ஆகஸ்ட் 2026, 4:39 am IST

அருப்புக்கோட்டை யில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பூ வியாபாரி மீது வெள்ளிக்கிழமை லாரி மோதியதில் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கரிசல்குளம் பாலசுப்பிரமணியத்தைச் சோ்ந்தவா் முத்துமாரி (50). பூ வியாபாரம் செய்து வந்தாா்.

இவா் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை பெத்தம்மாள் கோயில் அருகே வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சாத்தூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் முனியாண்டியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.