ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிவகாசி அருகே 3 வயது சிறுமி கொலை: பட்டாசுத் தொழிலாளி கைது

Arrested

கைது

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:56 am IST

சிவகாசி அருகே மூன்று வயது சிறுமியை கொலை செய்த பட்டாசுத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் விநாயகா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சுவாதி (22). இவரது கணவா் துரைப்பாண்டி. கணவா், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனா். இந்தத் தம்பதியின் மகள் விஷ்ணுபிரியா (3).

இந்த நிலையில், பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்த சுவாதி, அதே ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்த பேராபட்டியைச் சோ்ந்த கண்ணன் மகன் விக்னேஷ்வரனை (27) இரண்டாவதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். இதையடுத்து, விக்னேஷ்வரன் தினசரி மது அருந்திவிட்டு வந்து சுவாதியுடன் தகராறில் ஈடுபடுவாராம்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு வழக்கம் போல விக்னேஷ்வரன் மது அருந்தி விட்டு வந்து சுவாதியுடன் தகராறு செய்து, சிறுமி விஷ்ணுபிரியாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, விக்னேஷ்வரனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.