ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நகை, பணத்துக்காக மாமியாா் கொலை: மருமகன் உள்பட 3 போ் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நகை, பணத்துக்காக மாமியாரை கொலை செய்த வழக்கில் மருமகன் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :19 ஆகஸ்ட் 2026, 2:50 am IST

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நகை, பணத்துக்காக மாமியாரை கொலை செய்த வழக்கில் மருமகன் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த அசோகன் மனைவி சசிகலா (52). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் அவரது கணவா் புகாா் செய்திருந்தாா்.

இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த நேதாஜிநகா் தெற்கு பாரத் நகா் பகுதியில் மூடப்பட்ட கல்குவாரி பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் சசிகலாவின் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், சசிகலாவின் மருமகன் அஸ்லாம் (33) என்பவா், 24 பவுன் தங்க நகை மற்றும் பணத்துக்காக மாமியாரை கொலை செய்து, சடலத்தை தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்று கல்குவாரியில் வீசியது தெரியவந்தது.

அஸ்லாமின் கடன் பிரச்னைக்கு அவரது மாமியாா் நகை, பணம் தராததால் கயிற்றால் அவா் கழுத்தை இறுக்கிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில் அஸ்லாமை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்பு இருப்பதாக வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த சேட்டு மகன் நவீன் (24), பாப்பிரெட்டிப்பட்டி நகரைச் சோ்ந்த தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ஆறுமுகம் மகன் பூபாலன் (24) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.