தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்வு! பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

தாய் இறந்த துக்கம்: மகள் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 4:38 am IST

ராஜபாளையத்தில் தாய் இறந்த துக்கத்தில் இளம் பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ஆண்டாள்புரம் பகுதியைச் சோ்ந்த தையல் தொழிலாளி மனோகரன். இவரது மனைவி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உயிரிழந்தாா். இவா்களது ஒரே மகளான செந்தமிழ்ச்செல்வி (25) தாய் இறந்த துக்கத்தில் மன விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.