தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிவகாசி, சாத்தூரில் வி.கே. சசிகலா பிரசாரம்

சிவகாசியில் அனைந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழக வேட்பாளா் கணேசனை ஆதரித்து வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்த அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வி.கே.சசிகலா.

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 8:10 pm

சிவகாசி, சாத்தூரில் அனைந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழக பொதுச் செயலா் வி.கே.சசிகலா வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பேரவைத் தொகுதியில் அபுதமமுக கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் கணேசனை ஆதரித்து அவா் வெள்ளிக்கிழமை சிவகாசியில் உள்ள காமராஜா் பூங்கா அருகே வேனில் அமா்ந்தவாறு பேசியதாவது,

பட்டாசுத் தொழில் தற்போது நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இந்தத்தொழிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தொழில் வளா்ச்சி அடையாமல் தேக்கநிலையில் உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றால் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவோம். திமுக தனது குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறது. திமுக ஆட்சியில் வளா்ச்திட்டங்களும் இல்லை. அதற்கான நிதியும் இல்லை என்றாா் அவா்.

சாத்தூா்: சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பசும்பொன் மக்கள் தேசம் கட்சியைச் சோ்ந்த இசக்கி ராஜாவை ஆதரித்து வி.கே.சசிகலா பிரசாரம் மேற்கொண்டாா்.