காதல் செய்வதற்கு ஊனம் என்பது தடையில்லை என்பதை நிரூபித்து வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்திவருகிறார் திருப்பூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பி. கிருஷ்ணசாமி.
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த வேட்டுவபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பி. கிருஷ்ணசாமி (40). இவருக்கு 5 வயதாக இருக்கும்போது போலியோ காரணமாக இரு கால்களின் செயல்பாட்டையும் இழந்துவிட்டார். எனினும் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தும் மனம் தளராமல் படித்து பி.காம். படிப்பை முடித்துள்ளார். இதன் பிறகு தனது உறவுக்கார பெண்ணான பிரியதர்ஷினியை 3 ஆண்டுகளாகக் காதலித்து 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கிருஷ்ணசாமியின் ஊனத்தைப் பொருட்படுத்தாமல் அவரை காதலித்துள்ளார் பிரியதர்ஷினி. இந்தத் தம்பதிக்கு தரணிதரன்(12) என்கிற மகனும், திவ்யதர்ஷினி (10) என்கிற மகளும் உள்ளனர்.
காதலர் தினம் தொடர்பாக தம்பதியினர் கூறியதாவது:
உலகில் பிறந்த ஒவ்வொருவரும் காதலிக்கின்றனர். இதில், பெரும்பாலான காதல் திருமணத்தில் முடிவதில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது. ஒரு மனிதனுக்கு காதல் என்பது உடலையோ, அழகையோ, நிறத்தையோ பார்த்து வருவது கிடையாது என்பதற்கு எங்களது திருமணம் ஒரு சான்றாகும். நான் தற்போதும் மூன்று சக்கர வாகனத்தில் பிள்ளைகளின் வீட்டுக்கே சென்று டியூசன் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். ஆகவே, உடல் ஊனத்தைப் பெரிய குறையாக நினைக்காமல் தங்களுக்கு பிடித்தமானவர்களை காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள் என்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


