நவம்பர் 9, 2019 சனிக்கிழமை பிற்பகல் நியூயார்க் தமிழ்ச்சங்கம் தீபாவளிக் கொண்டாட்ட விழாவை நடத்தியது.
உமையாள் முத்து அவர்களின் சொற்பொழிவு, இலங்கை வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி அறிவிப்பாளர் அப்துல் அமீது அவர்களின் உரை மற்றும் "நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சி, பின்னணி பாடகர் ஹரீஸ் ராகவேந்திரா, சூப்பர் சிங்கர் பாடகர்கள் மற்றும் கனடா இசைக்குழுவினரின் மெல்லிசை, தீபாவளி விருந்து எனப் பல்சுவை நிகழ்ச்சிகள் நிறைந்த கோலாகல விழாவாக ஏறக்குறைய ஆறு மணி நேரம் நடைபெற்றது.

* விழாவில் நியூயார்க் சண்முகம் பெரியசாமியின் அறிமுக உரையைத் தொடர்ந்து, சங்க ஆலோசகர் மருத்துவர் எம்.என்.கிருஷ்ணன் அவர்கள், புதுச்சேரி அகன் பதிப்பித்த மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் 7 கவிதை நூல்களை வெளியிட்டார். (பிரபல தமிழ் நடிகை எம் என் ராஜத்தின் சகோதரர் மருத்துவர் எம்என் கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது).
* இலங்கை அப்துல் ஹமீது, உமையாள் முத்து, நியூயார்க் தமிழ்ச் சங்கத் தலைவர் ரங்கநாதன் புருஷோத்தமன், நியூயார்க் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் காஞ்சனா பூலா ஆகியோர் நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.
* அமெரிக்க மண்ணில் தமிழகக் கவிஞர் ஒருவரின் 7 கவிதை நூல்களை வெளியிட்ட சிறப்பிடத்தை நியூயார்க் தமிழ்ச் சங்கம் பெற்றுள்ளது ! .
*ராம் மோகன், குமரப்பன் அண்ணாமலை, பாலா சுவாமிநாதன் கதிர்வேல் குமாரராஜா உள்ளிட்ட சங்க நிர்வாகக் குழுவினர் மற்றும் ஆலோசனைக் குழுவினர் விழாவுக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


