/

செ.குளோரியான்

பாடல் - 6

என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்,
அங்கண்ணன் உண்ட என் ஆர் உயிர்க் கோது இது
புன்கண்மை எய்திப் புலம்பி இராப் பகல்
என் கண்ணன் என்று அவன் காட்கரை ஏத்துமே.

எம்பெருமான் கண்ணனுடைய கள்வத்தனங்கள் எனக்கு உண்மையைப்போலத் தோன்றுகின்றன, என்மீது அன்புகொண்ட அந்தக் கண்ணன் என் ஆருயிரை உண்டுவிட்டான், எஞ்சியிருக்கும் சக்கைதான் இது. இந்தச் சக்கை குறைந்த ஞானத்தோடு புலம்புகிறது, இரவுபகலாக அவனுடைய திருக்காட்கரையை எண்ணிப் போற்றுகிறது, ‘என் கண்ணன் எழுந்தருளியிருக்கும் திருத்தலம் இது’ என்று நெகிழ்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.