/

செ.குளோரியான்

பாடல் - 5

திருவருள் செய்பவன்போல என்னுள் புகுந்து
உருவமும் ஆர் உயிரும் உடனே உண்டான்,
திருவளர்சோலைத் தென்காட்கரை என் அப்பன்
கருவளர் மேனி என் கண்ணன் கள்வங்களே
.

திருவருள் செய்பவனைப்போல எனக்குள்ளே புகுந்து என்னுடைய உடலையும் ஆருயிரையும் உடனே உண்டான் எம்பெருமான், அழகு பெருகும் சோலைகளையுடைய திருக்காட்கரையிலே எழுந்தருளியிருக்கும் என் அப்பன், கருத்த திருமேனியைக்கொண்ட என் கண்ணனின் கள்வத்தனத்தை என்னென்பேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.