வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

செ.குளோரியான்

பாடல் - 11

சோலைத் திருக்கடித்தானத்து உறை திரு
மாலை, மதிள் குருகூர்ச் சடகோபன் சொல்
பாலோடு அமுது அன்ன ஆயிரத்து இப்பத்தும்
மேலை வைகுந்தத்து இருத்தும் வியந்தே.

சோலைகள் நிறைந்த திருக்கடித்தானத்திலே எழுந்தருளியிருக்கிற திருமாலை, மதிளால் சூழப்பட்ட குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களில் பாடினார், பாலோடு அமுது கலந்தாற்போன்ற அந்தப் பாடல்களிலே, இந்தப் பத்து பாடல்களையும் சொல்கிறவர்கள் உயர்ந்த வைகுந்தத்துக்குச் சென்று வியப்பான முறையில் அங்கே நிலைபெறுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.