வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

செ.குளோரியான்


பாடல் - 7

கொள்மின் இடர்கெட உள்ளத்துக் கோவிந்தன்
மண், விண் முழுதும் அளந்த ஒண் தாமரை,
மண்ணவர்தாம் தொழ வானவர் தாம் வந்து
நண்ணு திருக்கடித்தான நகரே.

பூமியிலே வாழ்கிறவர்கள் தொழ, வானத்துத் தேவர்களெல்லாம் வந்து சேர்கின்ற திருக்கடித்தான நகரிலே, மண், விண் முழுவதையும் அளந்த கோவிந்தனின் ஒளிவீசும் தாமரைத் திருவடிகளை உள்ளத்தில் கொள்ளுங்கள், துன்பங்கள் யாவும் நீங்கும்.


பாடல் - 8

தான நகர்கள் தலைசிறந்து எங்கு எங்கும்
வான், இந்நிலம், கடல் முற்றும் எம் மாயற்கே,
ஆன இடத்தும் என் நெஞ்சும் திருக்கடித்
தான நகரும் தன தாயப் பதியே.

வானிலும், இந்த நிலத்திலும், கடல்முழுவதும் எங்கு பார்த்தாலும் நம் மாயனுக்கு ஏற்ற தலைசிறந்த இடங்கள் பலப்பல உள்ளன. ஆனாலும், அப்பெருமான் தனக்கே உரிய தாய இடங்களாகக் கருதுபவை, என் நெஞ்சையும் திருக்கடித்தானத்தையும்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.