/

செ.குளோரியான்

பாடல் 7

கோ ஆகிய மாவலியை நிலம்கொண்டாய்,
தேவாசுரம் செற்றவனே, திருமாலே,
நாவாய் உறைகின்ற என் நாரண நம்பீ,
ஆ, ஆ, அடியான் இவன் என்று அருளாயே.

அரசனான மாவலியிடமிருந்து நிலத்தைப் பெற்றவனே, தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில் அசுரர்களை அழித்தவனே, திருமாலே, திருநாவாயிலே எழுந்தருளியிருக்கிற என்னுடைய நாரண நம்பியே, ‘அடடா! இவன் அடியவன்’ என்று எண்ணி எனக்கு அருள்புரிவாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.