/

ஒன்பதாம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 6

எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:26 pm

செ.குளோரியான்

பாடல் 6

கண்டே களிக்கின்றது இங்கு என்றுகொல் கண்கள்,
தொண்டே உனக்காய் ஒழிந்தேன் துரிசு இன்றி,
வண்டுஆர் மலர்ச்சோலைகள் சூழ் திருநாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே.

வண்டுகள் நிறைந்த மலர்ச்சோலைகளால் சூழப்பட்ட திருநாவாயிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமானே, எங்கள் ஆயர் தலைவரே, எந்தக் குற்றமும் இன்றி உங்களுக்கு அடிமைத்தொழில் செய்வதற்காகவே நான் வந்தேன், உங்களைக் கண்டு என்னுடைய கண்கள் மகிழ்வது என்றைக்கோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.