/

செ.குளோரியான்

பாடல் 3

எவைகொல் அணுகப் பெறுநாள் என்று எப்போதும்
கவையில் மனம் இன்றி கண்ணீர்கள் கலுழ்வன்,
நவைஇல் திருநாரணன் சேர் திருநாவாய்
அவையுள் புகல் ஆவது ஓர்நாள் அறியேனே.

எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருநாவாயைச் சென்றடையும் நாள் என்றைக்கோ என்று எப்போதும் ஏங்குகிறேன், வேறு எதையும் என் மனம் கருதுவதில்லை, அப்பெருமானைமட்டுமே நினைக்கிறது, கண்ணீர் விட்டு வருந்துகிறேன். குற்றமில்லாத திருநாரணன் எழுந்தருளியிருக்கும் அந்தத் திருநாவாயிலே, அப்பெருமானின் சபையில் நான் புகும் நாள் என்றைக்கோ? எனக்குத் தெரியவில்லையே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.