/

செ.குளோரியான்

பாடல் 5


தெளிவிசும்பு கடிது ஓடித் தீ வளைத்து மின் இலகும்
ஒளிமுகில்காள், திருமூழிக்களத்து உறையும் ஒண்சுடர்க்குத்
தெளிவிசும்பு திரு நாடா தீவினையேன் மனத்து உறையும்
துளி வார் கள் குழலார்க்கு என் தூது உரைத்தல் செப்புமினே?

தெளிவான வானத்திலே விரைந்து ஓடி, தீயால் வளைப்பதுபோல் மின்னல் மின்னுகின்ற ஒளிநிறைந்த மேகங்களே, திருமூழிக்களத்திலே எழுந்தருளியிருக்கும் ஒளிமிகுந்த சுடர் எம்பெருமான், தெளிவான வானத்திலிருக்கும் பரமபதத்தைப்போலவே, தீவினைகளைச் செய்தவளாகிய என்னுடைய மனத்திலும் உறைகின்ற பெருமான், துளித்து ஒழுகுகின்ற தேனையுடைய குழலைக்கொண்டவர், அவரிடம் எனக்காகத் தூது சென்று பேசுவீர்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.