

பாடல் - 1
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றம்கொலோ, அறியேன்,
ஆழி அம் கண்ணபிரான் திருக்கண்கள்கொலோ, அறியேன்,
சூழவும் தாமரை நாள்மலர்போல் வந்து தோன்றும் கண்டீர்,
தோழியர்காள், அன்னையீர், என்செய்கேன், துயராட்டியேனே.
தோழியரே, தாய்மார்களே, என்னைச் சுற்றிலும் அன்று மலர்ந்த தாமரையைப்போல வந்து தோன்றுகின்றவை, சக்கரப்படையைக் கையில் ஏந்திய அழகிய கண்ணபிரானின் திருக்கண்களா? அல்லது, பெண்களுடைய ஆவியை உண்ணும் இரண்டு எமன்களா? தெரியவில்லையே. எம்பெருமான் என்னை இப்படித் துயரப்படுத்தினால் நான் என்ன செய்வேன்?
***
பாடல் - 2
ஆட்டியும் தூற்றியும் நின்று அன்னைமீர், என்னை நீர் நலிந்து என்?
மாட்டு உயர் கற்பகத்தின் வல்லியோ, கொழுந்தோ, அறியேன்,
ஈட்டிய வெண்ணெய் உண்டான் திருமூக்கு, எனது ஆவியுள்ளே
மாட்டிய வல்விளக்கின் சுடராய் நிற்கும் வாலியதே.
தாய்மார்களே, என்னை நீங்கள் வருத்தியும், தூற்றியும் நலிவதால் என்ன பயன்? (ஏதுமில்லை.) திரட்டிய வெண்ணெயை உண்ட கண்ணபிரானின் திருமூக்கு, பக்கத்திலே உயர்ந்த கற்பகக்கொடியோ? கொழுந்தோ? நான் அறியேன். அந்தத் திருமூக்கு என்னுடைய ஆவியினுள்ளே ஏற்றிய வலிமையான விளக்கின் சுடராக நிற்கும் பெருமையைக்கொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!
வீடியோக்கள்
Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore
தினமணி வீடியோ செய்தி...

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

