தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்


பாடல் - 5

என்னுடைக் கோவலனே, என் பொல்லாக்
                                 கருமாணிக்கமே,
உன்னுடை உந்திமலர் உலகம் அவை
                                மூன்றும் பரந்து
உன்னுடைச் சோதி வெள்ளத்து அகம்பால்
                                உன்னைக் கண்டுகொண்டிட்டு
என்னுடை ஆர்உயிரார் எங்ஙனேகொல்
                                வந்து எய்துவரே?

என்னுடைய கோபாலனே, என்னுடைய துளையிடப்படாத கருமாணிக்கமே, உன்னுடைய திருவுந்தித் தாமரையிலே பிறந்த மூன்று உலகங்களிலே இருக்கும் எல்லாப் பொருட்களிலும் என்னுடைய அரிய உயிரானவர் திளைக்கிறார், இவர் (இந்த உயிர்), உன்னுடைய சோதிவெள்ளம் நிறைந்த வைகுண்டத்திலே உன்னைக் கண்டுகொண்டு எப்படி வந்து சேர்வார்?

***

பாடல் - 6

வந்து எய்தும் ஆறு அறியேன், மல்கு நீலச்
                                          சுடர் தழைப்பச்
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து ஒரு மாணிக்கம்
                                         சேர்வதுபோல்
அந்தரம்மேல் செம்பட்டோடு அடி, உந்தி, கை,
                                         மார்பு, கண், வாய்
செஞ்சுடர்ச் சோதி விட உறை என் திருமார்பனையே.

எம்பெருமானின் திரு அரையில் அவன் உடுத்தியுள்ள செம்பட்டுப் பீதாம்பரம் பேரழகாக இருக்கிறது, அதைக் காணும்போது, குறைவில்லாத நீலச் சுடர் மென்மேலும் வளர, சிவந்த சுடராகிய சோதிகளைப் பரப்பிக்கொண்டிருக்கும் ஒரு மாணிக்கத்தை வணங்குவதுபோலிருக்கிறது, (நீலவண்ணம் எம்பெருமானுடையது, செஞ்சுடர்கள் பீதாம்பரத்திலிருந்து எழுபவை.) அத்துடன், எம்பெருமானின் திருவடி, திருவுந்தி, திருக்கைகள், திருமார்பு, திருக்கண்கள், திருவாய் ஆகியவையும் செஞ்சுடராக ஒளிவிடுகின்றன. திருமகள் உறையும் திருமார்பைக்கொண்ட அத்தகைய எம்பெருமானை நான் எப்படி வந்துசேர்வேன்? எனக்குத் தெரியவில்லையே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.