தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்


பாடல் - 9

அன்று மண், நீர், எரி, கால், விண், மலைமுதல்,
அன்று சுடர் இரண்டும் பிறவும் பின்னும்,
அன்று மழை உயிர் தேவும் மற்றும், அப்பன்
அன்று முதல் உலகம் செய்ததுமே.

எம்பெருமான், நம் அப்பன், அன்றைக்கு முதன்முதலாக உலகத்தைச் செய்தான், நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், மலைமுதலான பொருட்கள், சூரிய, சந்திரர் என்கிற சுடர்கள், பிற பொருட்கள், மழை, உயிர், தெய்வங்கள், இன்னும் அனைத்தையும் படைத்தான். இப்படி அற்புதமானமுறையில் அனைத்தையும் படைத்தான் பெருமான்.

***

பாடல் - 10

மேய் நிரை கீழ் புக, மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய, இன
ஆ நிரை, பாடி அங்கே ஒடுங்க, அப்பன்
தீ மழை காத்துக் குன்றம் எடுத்தானே.

எம்பெருமான், நம் அப்பன், தீயைப்போல் பெய்த மழையிலிருந்து ஆயர்பாடியைக் காப்பதற்காகக் கோவர்த்தன மலையை எடுத்தான், அப்போது, மேய்கின்ற பசுக்கூட்டங்கள் அதன்கீழ் ஒதுங்கின, மலைமேலிருந்த விலங்குகள் புரண்டன, சுனைகளில் நிறைந்த நீர் அவற்றின் வாய்ப்பகுதியிலிருந்து முழங்கியபடி சொரிந்தது, பசுக்கூட்டங்களும் ஆயர்பாடியும் அங்கே ஒடுங்கின. இப்படி அற்புதமானமுறையில் கோவர்த்தன மலையை எடுத்து ஆயர்பாடியைக் காத்தான் பெருமான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.