

பாடல் - 5
சீர் கண்டு கொண்டு திருந்து நல் இன் கவி
நேர்பட யான் சொல்லும் நீர்மை இலாமையில்
ஏர்வு இலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னைப்
பார் பரவு இன் கவி பாடும் பரமரே.
எம்பெருமானின் சிறப்புகளைக் கண்டுகொண்டு, அவற்றைத் திருத்தமான, நல்ல, இனிய கவிகளாக நேர்த்தியுடன் சொல்லும் தன்மை எனக்கு இல்லை. ஆகவே, தகுதியில்லாத என்னைத் தன்னாக்கினான், என்னால் தன்னைப் பாடிக்கொண்டான், அதன்மூலம் உலகமே தன்னைப் போற்றும்படி செய்தான். அவ்வாறு இனிமையான கவிகளை என்மூலம் பாடிக்கொண்ட பரமன், எம்பெருமான்.
***
பாடல் - 6
இன் கவி பாடும் பரம கவிகளால்
தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று
நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை
வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.
இனிய கவிதைகளைப் பாடும் பரம கவிகள் பலர் உள்ளார்கள். அவர்களைக்கொண்டு எம்பெருமான் தன்னைப் பாடுவித்துக்கொள்ளவில்லை. இன்று, நல்ல முறையில் வந்து, என்னைக் கருவியாக்கிக்கொண்டு, என்னால் தன்னைச் சிறந்த பாசுரங்களால் பாடிக்கொள்கிறான் என் வைகுந்தநாதன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!
வீடியோக்கள்
Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore
தினமணி வீடியோ செய்தி...

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

