/

செ.குளோரியான்

பாடல் - 11

ஆதும் இல்லை மற்று அவனில் என்று அதுவே
           துணிந்து
தாது சேர் தோள் கண்ணனைக் குருகூர்ச் சடகோபன்
           சொன்ன
தீது இலாத ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள்
           இப்பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை ஆளுடையார்கள்
           பண்டே.

எம்பெருமானைத்தவிர வேறு யாரும் நமக்கில்லை என்பதை அறிந்து, மாலை அணிந்த திருத்தோள்களையுடைய அந்தக் கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் குற்றமில்லாத, அழகிய தமிழில் ஆயிரம் பாடல்களில் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் ஓதவல்லவர்கள் ஏற்கெனவே நம்மை அடிமையாக்கிக் கொண்டு விட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.