

பாடல் 5
நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு
அதன் நுண் நேர்மை அது இது என்று
ஒன்றும் ஒருவர்க்கு உணரல் ஆகாது,
உணர்ந்தும் மேலும் காண்பு அரிது,
சென்று சென்று பரம் பரமாய்
யாதும் இன்றித் தேய்ந்து அற்று
நன்று தீது என்று அறிவு அரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே.
நிலையாக நின்ற ஆத்மாவை எம்பெருமான் எனக்குக் காட்ட, நான் அதை உணர்ந்தேன். அதன் நுட்பமான தன்மை அப்படிப்பட்டது, இப்படிப்பட்டது என யாராலும் உணர இயலாது, ஒருவேளை உணர்ந்தாலும், அதனை மேலும் காண இயலாது. ஒன்றுக்கொன்று மேம்பட்டுச் சென்று, எதுவும் இல்லாதபடி தேய்ந்து அழிந்து, (மற்ற உலக விஷயங்களைப்போல்) நல்லது, தீயது என அறிந்துகொள்வதற்கு இயலாத, அரிய ஒன்றாக, ஞானங்களால் எட்ட இயலாதபடி அவற்றைக் கடந்து அது நன்றாக நின்றது.
பாடல் 6
நன்றாய் ஞானம் கடந்துபோய்
நல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த அரும் பெரும் பாழ்
உலப்பு இல் அதனை உணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை அற்றால்
அன்றே அப்போதே வீடு,
அதுவே வீடு வீடாமே.
ஆன்மாவானது, முதலில் இந்திரியங்களின் இன்பங்களைக் கடந்துசெல்லவேண்டும், அவற்றோடு பிணைந்துள்ள அரிய, பெரிய, வலுவான, அழிவில்லாத பிரகிருதி என்னும் உலகத்தத்துவத்தை உணரவேண்டும், ஆன்மாவின் இயல்பை உணரும்வரை செல்லவேண்டும், அங்கே இன்ப துன்பங்களுக்குக் காரணமான பாவ, புண்ணியங்களை நீக்கவேண்டும், அவற்றின் பசையும் இல்லாதபடி முழுமையாக அகற்றவேண்டும், அவ்வாறு அகற்றினால், அன்றைக்கே, அப்போதே உலகியல் அனுபங்களிலிருந்து ஆன்மா விடுபடும்; வீடுபேறு அனுபவத்தைப் பெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு
மீண்டும் நடிக்க வரும் ரம்பா!
வாக்காளர் இறுதிப் பட்டியல்! தருமபுரியில் 12.40 லட்சம் பேர்!
வேலூரில் விஜய் சொன்ன குட்டிக் கதை!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

