

பாடல் 3
உணர்வில் உம்பர் ஒருவனை
அவனது அருளால் உறற்பொருட்டு என்
உணர்வின் உள்ளே இருத்தினேன்,
அதுவும் அவனது இன் அருளே,
உணர்வும் உயிரும் உடம்பும் மற்று
உலப்பு இலனவும் பழுதேயாம்,
உணர்வைப் பெற ஊர்ந்து இறவு ஏறி
யானும் தானாய் ஒழிந்தானே.
ஞானத்திலே சிறந்தவர்களின் தலைவனை, அவனுடைய அருளாலே பெறவேண்டும் என்று விரும்பினேன், அதற்காக என் உணர்விலே அவனை இருத்தினேன், அதுவும் அவனுடைய இனிய அருளாலேயே நிகழ்ந்தது. ஞானம், உயிர், உடல் போன்றவையும், மற்ற பல தத்துவங்களும் உறுதிப்பொருட்கள் அல்ல என்பதை நான் அறிந்தேன்; இந்த முடிவான உணர்வை நான் பெறும்படி அவன் செய்தான்; நானும் இறைவனின் ஒரு பகுதியே என்று ஆக்கி எனக்குள் அவன் ஒன்றானான்.
பாடல் 4
யானும் தானாய் ஒழிந்தானை
யாதும் யவர்க்கும் முன்னோனை
தானும் சிவனும் பிரமனும்
ஆகிப் பணைத்த தனி முதலைத்
தேனும் பாலும் கன்னலும்
அமுதும் ஆகித் தித்தித்து என்
ஊனில் உயிரில் உணர்வினில்
நின்ற ஒன்றை உணர்ந்தேனே.
நானும் தானாகும்படி செய்தவனை, எதற்கும், எவருக்கும் முன்னோனாகத் திகழ்பவனை, தானாகவும் சிவனாகவும் பிரமனாகவும் ஆகித் திகழ்ந்த தனி முதல்வனை, தேனாக, பாலாக, கரும்பாக, அமுதாகத் தித்தித்து என்னுடைய உடலில், உயிரில், உணர்வில் நின்ற எம்பெருமானை நான் உணர்ந்தேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு
மீண்டும் நடிக்க வரும் ரம்பா!
வாக்காளர் இறுதிப் பட்டியல்! தருமபுரியில் 12.40 லட்சம் பேர்!
வேலூரில் விஜய் சொன்ன குட்டிக் கதை!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

