வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

செ.குளோரியான்


பாடல் 1

கண்கள் சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து உள்ளே
வெண் பல் இலகு சுடர் இலகு
விலகு மகர குண்டலத்தன்,
கொண்டல்வண்ணன், சுடர்முடியன்,
நான்கு தோளன், குனி சார்ங்கன்,
ஒண் சங்கு, கதை, வாள், ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே.

பெரிய, சிவந்த திருக்கண்கள், சிவந்த, கனிந்த திருவாய், உள்ளே வெண்ணிறத் திருப்பற்களின் விளங்கும் சுடர், விளங்கி அசைகிற மகரகுண்டலங்களைக் கொண்டவன், மேகவண்ணன், சுடர்வீசும் திருமுடியைக் கொண்டவன், நான்கு திருத்தோள்களைக் கொண்டவன், வளைந்த சார்ங்கம் என்கிற வில்லைக் கொண்டவன், ஒளிவீசும் சங்கு, கதை, வாள், திருச்சக்கரம் ஆகியவற்றைக் கொண்டவன், ஒப்பற்ற அந்தப் பெருமான், எனக்குள் வாழ்கிறான்.

பாடல் 2

அடியேன் உள்ளான், உடல் உள்ளான்,
அண்டத்து அகத்தான், புறத்து உள்ளான்,
படியே இது என்று உரைக்கலாம்
படியன் அல்லன், பரம்பரன்,
கடிசேர் நாற்றத்து உள் ஆலை
இன்ப துன்பக்கழி நேர்மை
ஒடியா இன்பம் பெருமையோன்
உணர்வில் உம்பர் ஒருவனே.

அண்டத்திலே உள்ள அனைத்து உயிர்களுக்குள்ளும் இருப்பவன், அண்டத்துக்கு வெளியே உள்ளவற்றினுள்ளும் அவனே இருக்கிறான், இதுதான் இவனுடைய தன்மை என்று யாராலும் வரையறுத்துச்சொல்ல இயலாது, அவன் பரம்பொருள், நறுமணம் நிறைந்த தேனில் இருக்கும் சுவையிலே, குறைபட்ட பாகத்தை நீக்கியபின் கிடைப்பது எதுவோ, அத்தகையவன் அவன், குறையாத இன்பத்தைக்கொண்டவன், அறிவிலே மேம்பட்டவன், எம்பெருமான். அத்தகைய பெருமான், எனக்குள்ளும் என் உடலுக்குள்ளும் இருக்கிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.