வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

செ.குளோரியான்

பாடல் 11

சுடர்ப்பாம்பு அணை நம் பரனை, திருமாலை
அடிசேர்வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து இப்பத்தும் சன்மம்
விடத் தேய்ந்து அறநோக்கும் தன் கண்கள் சிவந்தே.

ஒளி வீசும் பாம்பாகிய ஆதிசேஷனைத் தன் படுக்கையாகக் கொண்ட நம் பெருமான், திருமால். மற்ற விருப்பங்களைத் தொலைத்து, அவருடைய திருவடிகளைச் சேரும் வகையை, வளமையான குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களில் சொன்னார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் யார் பாடுகிறார்களோ, அவர்கள் மீண்டும் பிறவியெடுக்கமாட்டார்கள், இந்தப் பாடல்கள் அவர்களுடைய பிறவிநோயைக் கண் சிவந்து பார்க்கும், (பிறவிச்சுழலை அழிக்கும், அவர்களை எம்பெருமான் திருவடிகளில் சேர்க்கும்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.