வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

செ.குளோரியான்

பாடல் 7

செவ்வாய், உந்தி, வெண் பல், சுடர்க்குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ளச்
செவ்வாய் முறுவலோடு எனது உள்ளத்து இருந்த
அவ்வாய் அன்றி யான் அறியேன் மற்று அருளே.

எம்பெருமானின் சிவந்த திருவாய், திருவுந்தி, வெண்மையான திருப்பற்கள், ஒளி மிகுந்த குழை ஆகியவற்றோடு, அவருடைய பிற உடல் பாகங்களும் சுடர் வீசுகின்றன, இவை அனைத்தின் சுடரும் ஒன்றையொன்று முந்திக்கொண்டு வளைக்க, சிவந்த வாயிலே முறுவலோடு என் உள்ளத்திலே இருந்தார் அப்பெருமான், இதைத்தவிர வேறு எந்த அருளும் நான் அறியேன்.

பாடல் 8

அறியேன் மற்று அருள், என்னை ஆளும் பிரானார்
வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்கு உகந்து,
சிறியேனுடைச் சிந்தையுள் மூ உலகும் தம்
நெறியா வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரே.

என்னை ஆளும் பிரான், ஒருவருக்கு மகிழ்வோடு அருள்செய்யவேண்டும் என்று நினைத்துவிட்டால், அதற்குக் காரணமே தேவையில்லை, காரணமில்லாமலே அருள்செய்வார், மூன்று உலகையும் முறையாகத் தன்னுடைய வயிற்றிலே கொண்ட அப்பெருமான், சிறியவனாகிய என்னுடைய சிந்தனையிலே நின்றாரே, இதைத்தவிர வேறு அருளை நான் அறியேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.