வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

செ.குளோரியான்

பாடல் 5

திகழும் தன் திரு அருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ்தான் அது காட்டித்தந்து என்னுள்
திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்துநின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே.

ஒளிவீசும் தன்னுடைய திருவருளை எனக்குச் செய்து, உலகத்தவர் என்னைப் புகழுகின்ற புகழையும் எனக்குக் காட்டித்தந்து, எனக்குள்ளே ஒளிவீசும் மணிக்குன்றைப்போல நின்றான் எம்பெருமான், இதைத்தவிர வேறுவிதமாக நான் அவனைப் புகழவேண்டுமோ!


பாடல் 6

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும்?
கருமாணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்
திருமார்பு, கால், கண், கை, செவ்வாய், உந்தியானே.

கருமாணிக்கக் குன்று ஒன்றில் தாமரை பூத்ததுபோல் திருமார்பு, திருக்கால்கள், திருக்கண்கள், திருக்கைகள், சிவந்த திருவாய், திருவுந்தியைக்கொண்ட எம்பெருமான், எத்தனையோ சிறந்த பேறுகளில் ஒன்றை எனக்குத் தந்தான், அப்படியானால், அனைத்திலும் சிறந்தவனாகிய தன்னை அவன் யாருக்குத் தருவான்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.