தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்

எஞ்ஞான்றும் நாம் இருந்துஇருந்து இரங்கி, நெஞ்சே,
மெய்ஞ்ஞானம் இன்றி வினைஇயல் பிறப்பு அழுந்தி,
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவுஅற நிறைந்துநின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே.

நெஞ்சே, உண்மையான ஞானம் இல்லாமல், நாம் வினையால் ஏற்படும் பிறவிச்சுழலில் அழுந்தி, இங்கேயே பிறந்து, இருந்து, வருந்தி வாடுகிறோம், எப்போதும் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற மெய்ஞ்ஞானச் சோதியான கண்ணனை நம்மால் அடைய இயலுமா?

•••

பாடல் - 8

மேவு துன்பவினைகளை விடுத்தும்இலேன்,
ஓவுதல்இன்றி உன்கழல் வணங்கிற்றிலேன்,
பாவு தொல்சீர்க் கண்ணா, என் பரம்சுடரே,
கூவுகின்றேன் காண்பான், எங்கு எய்தக் கூவுவனே?

எங்கும் பரந்து விரிந்த, பழைமையான சிறப்பைக்கொண்ட கண்ணனே, என் பரம் சுடரே, துன்பங்களை உண்டாக்கும் வினைகளை நான் விடவில்லை, ஓய்வின்றி உன்னுடைய திருவடிகளை வணங்கவுமில்லை, உன்னைக் காண வேண்டும் என்று விரும்பிக் கூவுகிறேன், உன்னை எங்கே சென்று அடைந்துவிட முடியும் என்று நான் நினைக்கிறேனோ! (எந்தப் பெரிய செயல்களையும் செய்யாமல் உன்னை அடைந்துவிடலாம் என்று நான் அப்பாவித்தனமாக எண்ணுகிறேன்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.