வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

செ.குளோரியான்

முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில்வண்ணனே,
அந்நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்,
வெம்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப்பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனிவந்து கூடுவனே?

கடலால் சூழப்பட்ட உலகத்தைப் படைத்த எங்கள் முகில்வண்ணனே, அன்றைக்கு நீ தந்த உடலிலே சிக்கித் திணறுகிறேன், இந்தக் கொடிய நாள்களும் பிறவி நோயும் தீர்ந்து, வினைகளையெல்லாம் வேரோடு பறித்து எறிந்துவிட்டு நான் உன்னை வந்து சேர வேண்டும், அந்த நாள் என்றைக்கு?

•••

பாடல் - 2

வல்மா வையம் அளந்த எம் வாமனா, நின்
பல்மா மாயப் பல்பிறவியில் படிகின்ற யான்,
தொல்மா வல்வினைத்தொடர்களை முதல்அரிந்து
நின்மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்றுகொலோ?

வலிமையான, பெரிய உலகம்முழுவதையும் அளந்த எங்கள் வாமனா?
நீ தந்த பல பெரிய மாயைகளில் சிக்கி, பல பிறவியெடுத்து நான் சிரமப்படுகின்றேன், பழைய, பெரிய, வலிமையான வினைகளையெல்லாம் முழுவதுமாக அரிந்து எறிந்துவிட்டு உன்னுடைய சிறந்த திருவடிகளைச் சேர்ந்து நான் நிற்கவேண்டும், அந்த நாள் என்றைக்கு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.