/

செ.குளோரியான்

அறியாக்காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து
அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மாவலி மூஅடிஎன்று
அறியாமை வஞ்சித்தாய் எனது ஆவிஉள்கலந்தே.

எம்பெருமானே,

யாரும் அறியாதபடி வாமன அவதாரம் எடுத்துவந்தாய், மாவலியிடம் மூன்று அடி நிலம் வேண்டும் என்று கேட்டாய், நீ எதற்காக இப்படிக் கேட்கிறாய் என்று அறியாமல் அவனும் அதனைத் தந்தான், அவனை வஞ்சித்து உலகைக்காத்தாய், புரியாத பெரிய மாயத்தில் சிக்கிக்கிடந்த என் ஆவியுள் கலந்தாய், இறைவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை இளமைக் காலத்திலேயே எனக்குள் உருவாக்கினாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.