

கண்களால் காண வரும்கொல்என்று ஆசையால்
மண்கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண்கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத்
திண்கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.
கண்களால் காணும்படி எம்பெருமான் வர வேண்டும் என்று என் காதுகள் ஆசைப்படுகின்றன, ஏன் தெரியுமா? வாமனனாக வந்து மூன்றடி மண்ணைப் பெற்ற எம்பெருமான், கருடன்மீது ஏறுகிறான், அது மகிழ்ச்சியோடு செல்கிறது, அப்போது கருடனின் சிறகுகள் அசையும் ஓசை, வேதம்போல் ஒலிக்கிறது, அதைக் கேட்கவேண்டும் என்று என்னுடைய காதுகள் ஏங்குகின்றன.
•••
பாடல் 6
செவிகளால் ஆர நின் கீர்த்திக்கனிஎனும்
கவிகளே காலப்பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின்மேல் பொன் நெடும் சக்கரத்து உன்னையே
அலிவுஇன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.
எம்பெருமானே, உன்னுடைய புகழைச் சொல்லும் கனிகளாகிய பாடல்களைக் காலத்துக்கேற்ற பண்கள் என்னும் தேனில் தோய்த்துப் பாட வேண்டும், அதை நிறையக் கேட்க வேண்டும் என்றே என் காதுகள் விரும்புகின்றன, இந்தப் பூமியிலே, என்னுடைய உயிர், அழகிய, நீண்ட சக்ராயுதத்தை ஏந்திய பெருமானாகிய உன்னையே இடைவெளியின்றி விரும்பும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!
வீடியோக்கள்

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...
Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore
தினமணி வீடியோ செய்தி...

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

