

சன்மசன்மாந்தரம் காத்து அடியார்களைக்
கொண்டுபோய்த்
தன்மை பெறுத்தித் தன் தாள்இணைக்கீழ்க்
கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்றவல்லாரைப்
பிதற்றும் அவர்கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக்
கொள்கின்ற நம்பரே.
தன்னுடைய அடியவர்களுக்குப் பிறவித்துயரம் வராதபடி காக்கிறவன், அவர்களுக்குத் தனது திருவுருவத்தைக் காண்பித்துத் தன் திருவடியின் கீழ் அமர்த்துகிற அப்பன், எம்பெருமான், அவனது தொண்டர்கள், அவனுடைய பழைமையை, பெருமைகளைச் சொல்லிப் பிதற்றுகிறார்கள், அத்தகைய தொண்டர்களின் பெருமைகளைச் சொல்லிப் பிதற்றுகிறவர்கள் யாரோ, அவர்களே எங்களுடைய நம்பிக்கைக்குரியவர்கள், எப்போதும் எங்களை ஆள்கிறவர்கள், எங்களுக்கு நன்மை செய்கிறவர்கள்.
•••
பாடல் 8
நம்பனை, ஞாலம் படைத்தவனை,
திருமார்பனை,
உம்பர் உலகினில் யார்க்கும்
உணர்வு அரியான்தன்னைக்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர்கண்டீர்
எம் பல்பிறப்பு இடைதோறும்
எம் தொழுகுலம் தாங்களே.
அடியவர்களால் நம்பப்படுகிறவன், இவ்வுலகைப் படைத்தவன், மார்பிலே திருமகளைத் தரித்தவன், மேலுலகிலுள்ள தேவர்களால்கூட உணரப்பட இயலாத பெருமைகொண்டவன், எம்பெருமான், கும்பீபாக நரகத்தில் இருந்தாலும்கூட அப்பெருமானின் பெருமைகளைச் சொல்லிப் போற்றுகிறவர்கள் யாரோ, அவர்கள்தான் எங்களுடைய பல பிறவிகளிலும் எங்களுக்குத் தெய்வங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!
வீடியோக்கள்
Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore
தினமணி வீடியோ செய்தி...

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

